Android Phones : உங்கள் போனில் அதை நீங்கள் பயன்படுத்தாத நேரத்திலும், சில ஆப்ஸ் பின்னணியில் இயங்குகிறது. அவற்றால் போனில் பேட்டரி மற்றும் மொபைல் டேட்டா விரைவில் தீர்ந்துவிடுகிறது. ஆனால் இதை சரிசெய்ய சில வழிகள் உண்டு.
இப்போதெல்லாம் கையில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே இல்லை எனலாம். காலை எழுந்தது முதல் மாலை வரை போனில் நேரத்தை செலவிடுபவர்கள் ஏராளம். இருப்பினும் நீண்ட நேரம் போனை உபயோகிப்பதால் போனின் பேட்டரி விரைவில் தீர்ந்துவிடும். மேலும் மொபைல் டேட்டாவும் தீர்ந்துவிடும். ஆனால் போனைப் பயன்படுத்தும் போதும் மொபைல் டேட்டா மற்றும் பேட்டரியைச் சேமிக்க சில நல்ல நுட்பங்கள் உள்ளன. அதை இப்போது பார்ப்போம்...
மொபைல் டேட்டா மற்றும் ஃபோன் பேட்டரி விரைவாக தீர்ந்துபோவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஆனால் இணையத்தை அதிகம் பயன்படுத்தும் போது உங்கள் மொபைல் டேட்டா தீர்ந்துவிடும். நீண்ட நேரம் போனை உபயோகித்தால் சார்ஜிங்கும் தீர்ந்துவிடும். ஆனால் சில நேரங்களில் போனை நாம் பெரிதும் பயன்படுத்தாதபோதும் அவை தீர்ந்துவிடும். அதற்குக் காரணம், சில ஆப்ஸ் பின்னணியில் இயங்குவது தான்.
undefined
அவற்றால் தான் பேட்டரி மற்றும் மொபைல் டேட்டா விரைவில் தீர்ந்துவிடுகிறது. இதற்கு உங்கள் போனில் சில செட்டிங்ஸ் மாற்றினால் போதும். சரி முதலில் உங்கள் டேட்டாவை எப்படி சேமிப்பது என்பது குறித்து காணலாம்...
முதலில் இதற்கு முதலில் நீங்கள் உங்கள் போன் செட்டிங்ஸ் உள்ளே செல்ல வேண்டும். இரண்டாவதாக சேவ் நெட்ஒர்க், இன்டர்நெட் டேட்டா பகுதிக்கு செல்ல வேண்டும். அடுத்தபடியாக எந்தென செயலிகளுக்கு இன்டர்நெட் தேவைப்படுகிறதோ அதற்கு அனுமதி அளிக்கவேண்டும். இதை செய்தாலே உங்கள் டேட்டா தேவையின்றி வீணாவது தடுக்கப்படும்.
5ஜியில் இருந்து 4ஜிக்கு மாற்றம் செய்தால் போன் சார்ஜ் குறைவது சற்று குறையும்.
அதற்கு முதலில் உங்கள் போனில் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்ல வேண்டும், அதன் பிறகு வரும் மெனுவில் கனெக்க்ஷன்ஸ் என்ற இடத்திற்கு செல்லவேண்டும். அதன் பிறகு அதில் உள்ள மொபைல் நெட்ஒர்க் என்பது ஓபன் செய்ய வேண்டும். அதன் பின் நெட்ஒர்க் மோட் என்பதற்கு செல்ல வேண்டும். அதில் நீங்கள் உங்கள் இணைய சேவையை மாற்றிக்கொள்ளலாம்.
குறைந்த பவர் பயன்முறை அல்லது பேட்டரி சேவர் பயன்முறையைப் பயன்படுத்தும்போது பெரிய அளவில் உங்களால் பேட்டரியை சேமிக்க முடியும். நீங்கள் ஐபோன் பயன்படுத்துபவராக இருந்தால், குறைந்த ஆற்றல் பயன்முறையைப் பயன்படுத்தலாம். இதற்கிடையில், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு தொலைபேசியில் பேட்டரி சேவர் பயன்முறை கிடைக்கிறது. இரண்டு அம்சங்களின் உதவியுடன், உங்கள் மொபைல் போனில் பேட்டரியைச் சேமிக்கலாம்.
வங்கி விவரம் எதையும் உளறவில்லை... ஆனா அக்கவுண்டல ரூ.4 லட்சம் குறையுது! இப்படியும் மோசடி நடக்குமா?