இயற்கையான முறையில் ஆண்களுக்கென "சூப்பர் பேஸ்பேக்" பயன்படுத்தலாம் தெரியுமா..?

thenmozhi g   | Asianet News
Published : Mar 27, 2020, 06:15 PM IST
இயற்கையான முறையில் ஆண்களுக்கென "சூப்பர் பேஸ்பேக்" பயன்படுத்தலாம் தெரியுமா..?

சுருக்கம்

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், தன் முகத்தை பளபளப்பா நல்ல நிறமாக வைத்துக்கொள்ள விரும்பும் ஆண்கள் தேவை இல்லாத விலை உயர்ந்த பேஸ்பேக் வாங்கி பயன்படுத்துவதை விட இயற்கை முறையில் மிக எளிதாக வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே பேஸ்பேக் தயார் செய்து யூஸ் பண்ணலாம்

இயற்கையான முறையில் ஆண்களுக்கென சூப்பர் பேஸ்பேக் பயன்படுத்தலாம் தெரியுமா..? 

பொதுவாகவே அழகு என்றாலே பெண்கள் தான் அதிக ஆர்வமாக தங்களை மிக அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பார்கள் என்றில்லை.

தற்போதெல்லாம் பெண்களை விட ஆண்கள் தான் தங்களை எப்போதும் ஸ்மார்ட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பார்கள்

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், தன் முகத்தை பளபளப்பா நல்ல நிறமாக வைத்துக்கொள்ள விரும்பும் ஆண்கள் தேவை இல்லாத விலை உயர்ந்த பேஸ்பேக் வாங்கி பயன்படுத்துவதை விட இயற்கை முறையில் மிக எளிதாக வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே பேஸ்பேக் தயார் செய்து யூஸ் பண்ணலாம் 

தேவையான பொருட்கள்

அரிசி மாவு 
காய்ச்சாத பால் 
தேன்

முதலில் சிறிதளவு அரிசி மாவை எடுத்துக்கொண்டு அதில் தேவையான அளவிற்கு காய்ச்சாத பாலை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.பின்னர், அதில் சிறிதளவு தேன் சேர்த்து, இவை மூன்றையும் நன்கு கலக்கி ஒரு பேஸ்பேக் தயார் செய்துக்கொள்ளலாம்.இதில் தேன் சேர்ப்பதால் முகத்தில் உள்ள முடி வெள்ளை நிறமாக மாறி விடும் என பயப்பட வேண்டாம்...அப்படி ஒன்றும் ஆகாது. மேற்குறிப்பிட்ட மாதிரி தயார் செய்யப்பட்ட பேஸ்பேக்கை சிறிதளவு கையில் எடுத்து முகத்தில் அப்ளை செய்யலாம்.

இவ்வாறு அப்ளை செய்த உடன் சுமார் அரை மணி நேரம் அப்படியே விடுங்க...பின்னர் சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவிக் கொள்ளலாம்.

மேலும் இந்த பேக் முகத்தில் அப்ளை செய்தவுடன் குறைந்த பட்சம் சுமார் ஆறு மணி நேரமாவது வெயில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் பாருங்கள் உங்கள் முகம் எப்படி கலராக மாறி உள்ளது என்று...இது போன்று வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்