போன் செய்தால் போதும் மளிகை பொருட்கள் வீடு தேடி வரும்... மதுரை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை...!

By Kanimozhi Pannerselvam  |  First Published Mar 27, 2020, 5:05 PM IST

மளிகை பொருட்கள் தேவை என மதுரைவாசிகள் போன் செய்தாலே போதும், வீட்டிற்கே நேரில் சென்று டோர் டெலிவரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலிவாங்கியுள்ளது. இந்த வைரசை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: “இதுதான் என் கடைசி போட்டோ”... கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு தலைமறைவான சனம் ஷெட்டி...!

ஆனால் தமிழகத்தில் இதை மதிக்காமல் வெளியே சுற்றுபவர்கள் தான் அதிகம் இருக்கின்றனர். என்ன தான் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியே வாருங்கள் என அரசு அறிவுறுத்தி இருந்தாலும், பைக் மற்றும் காரில் ஊர் சுற்றுபவர்களை சரளமாக காண முடிகிறது. 

மக்களை மீண்டும் வீட்டிற்குள் அமர்ந்த போலீஸ் என்ன தான் விதவிதமான ட்ரீட்மெண்டுகளை கையில் எடுத்தாலும் எதுவும் பலனளிப்பதாக தெரியவில்லை. மளிகை கடைக்கு போகிறேன்... காய்கறி வாங்க போறேன்... என்று வெளியே வந்துவிடுகின்றனர். 

இதை தடுக்க மதுரை மாநகராட்சி ஒரு சூப்பர் நடவடிக்கையை அறிவித்துள்ளது. மளிகை பொருட்கள் தேவை என மதுரைவாசிகள் போன் செய்தாலே போதும், வீட்டிற்கே நேரில் சென்று டோர் டெலிவரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: ஊரடங்கிலும் கட்டுக்கடங்காத கிரண்... கொரோனாவை விட மிரட்டும் கவர்ச்சி..!

அதன்படி அண்ணா நகர், கே.கே.நகர், கூடல் நகர், விளாங்குடி, தத்தனேரி, ஆரப்பாளையம், அரசரடி, காளவாசல், தெப்பக்குளம் உள்ளிட்ட 17 பகுதிகளில் செயல்படும் மளிகை கடைகளை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. 

click me!