இப்படி தீபம் ஏற்றினால் வீட்டில் லட்சுமி எப்படி தங்கும்...?

Published : Mar 11, 2019, 08:03 PM IST
இப்படி தீபம் ஏற்றினால் வீட்டில் லட்சுமி எப்படி தங்கும்...?

சுருக்கம்

நம் முன்னவர்கள் சொல்லி வைத்து சென்ற எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அதற்கு பின் பல அறிவியல் உண்மைகள் இருக்கும் அல்லவா..? அதில் ஒன்று தான் இது... 

நம் முன்னவர்கள் சொல்லி வைத்து சென்ற எந்த ஒரு விஷயமாக  இருந்தாலும், அதற்கு பின் பல அறிவியல் உண்மைகள் இருக்கும் அல்லவா..? அதில் ஒன்று தான் இது... 

நம் வீட்டில் எப்போது தீபம் ஏற்ற வேண்டும்,எப்போது ஏற்றவேண்டும், எந்த திரியை பயன்படுத்த வேண்டும், எந்த எண்ணெய்யில் விளக்கு ஏற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம்.

காலையில் உஷத் காலத்திலும் மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். எவர்சில்வர் விளக்கு ஆகாது. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது உத்தமம். தீபத்தை கிழக்கு திசையிலும் மேற்கு திசை நோக்கியும் வடக்கு திசை நோக்கியும் தீபம் ஏற்றவேண்டும். தெற்கு எமனுடைய திசை என்பதால் தெற்கே பார்த்து தீபம் ஏற்றக்கூடாது.

ஒரு திரி ஏற்றுவோர் எப்போதும் கிழக்கு நோக்கியே தீபமேற்ற வேண்டும். புதிய மஞ்சள் துணி திரி போட்டு விளக்கு ஏற்றினால் செய்வினை பில்லி சூனியம் பேய் பிசாசு அண்டாது.

பஞ்சுத்திரி போட்டு விளக்கேற்றினால் மங்கலம் உண்டாகும். வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்றினால் புத்திர பாக்கியம் கிடைக்கும். பட்டு நூல் திரி போட்டு விளக்கேற்றினால் எல்லாவித சுகங்களும் கிடைக்கும். ஆமணக்கு எண்ணெயில் தீபம் போட்டால் அனைத்து செல்வமும் கிடைக்கும். தேங்காய் எண்ணையில் தீபம் ஏற்றினால் தேக ஆரோக்கியம், செல்வம் கிடைக்கும். நல்லெண்ணை தீபம் ஏற்றினால் எம பயம் அகலும்.

தாமரை நூல் திரி போட்டு விளக்கேற்றினால் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும். நெய்தீபம் ஏற்றினால் சகல சௌபாக்கியமும் உண்டாகும். நீர் நிரம்பிய பாத்திரத்தை பூஜை அறையில் வைப்பது நல்லது.பூஜை அறையில் விளக்கு வைத்தால் பாவம் தீரும். அகல் விளக்கு வைத்தால் சக்தி தரும். 

தீப சரஸ்வதி என்று மூன்று முறையும், தீபலட்சுமி என்று மூன்று முறையும், தீப துர்கா என்று மூன்று முறையும் குல தெய்வத்தை நினைத்து மூன்று முறையும் தீபத்தை பன்னிரண்டு முறை நமஸ்காரம் செய்ய வேண்டும். தீபத்தை வாயால் ஊதி அணைக்காமல் ஒரு பூவின் காம்பு கொண்டு தான் அணைக்க வேண்டும்

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்