விமான நிலையத்தில் கைக்குழந்தையை மறந்து விட்டு சென்ற தாய்..! பாதி வழியில் U TURN போட்டு திரும்பிய விமானம்..!

By ezhil mozhiFirst Published Mar 11, 2019, 7:27 PM IST
Highlights

விமான நிலைய காத்திருப்பு அறையிலேயே கைக்குழந்தையை மறந்து விட்டு விமானத்தில் பயணித்த தாய்க்கு, பாதி வழியில் குழந்தை நினைவு வரவே மீண்டும் தரையிறக்கப்பட்ட நிகழ்வு வைரலாகி  வருகிறது 

விமான நிலைய காத்திருப்பு அறையிலேயே கைக்குழந்தையை  மறந்து விட்டு விமானத்தில் பயணித்த தாய்க்கு, பாதி வழியில் குழந்தை நினைவு வரவே மீண்டும் தரையிறக்கப்பட்ட நிகழ்வு வைரலாகி வருகிறது 

வளைகுடா நாட்டின் Jeddah’s King Abdulaziz சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் செல்ல இருந்த விமானத்தில் (Flight SV832 )பயணம் செய்த ஒரு பெண், திடீரென தன் கைக்குழந்தையை  காத்திருப்பு அறையிலேயே மறந்து விட்டு வந்ததாக தெரிவிக்க அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் விமானியிடம் இந்த தகவலை தெரிவிக்க, உடனடியாக கன்ட்ரோல் அறைக்கு தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்து உள்ளார் விமானி  

பின்னர் இதற்கிடையில் விமானத்தை மீண்டும் Jeddah’s King விமான நிலையத்திற்கே திரும்புமாறு கட்டாயப்படுத்தி உள்ளார் அந்த பெண்மணி. இவை அனைத்தும் கன்ட்ரோல் அறைக்கு தெரிவித்து, பின்னர் மற்ற பாதுகாப்பு நடவடிக்கை, வேறு விமானம் தரை இறங்கும் நேரம் என அனைத்தையும் சிறிது நேரம் மாற்றி அமைத்து, விமானத்தை  தரை இறக்க அனுமதி கொடுத்து உள்ளனர்.
 
அதுவும் பாதி வழியை கடந்த பின்னரே குழந்தை குறித்த நினைவு வந்துள்ளது அந்த பெண்ணிற்கு. இந்த சம்பவம் தற்போது உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

click me!