தெரு தெருவாய் மண்பானையை தேடும் கோடீஸ்வரர்கள்...!

By ezhil mozhiFirst Published Mar 11, 2019, 2:52 PM IST
Highlights

தொடர்ந்து அதிகாரித்து வரும் வெயில் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எங்கு பயணம் மேற்கொண்டாலும் நிழற்குடை கிடைக்குமா என்ற ஏக்கம் தான் அதிகம்.

தொடர்ந்து அதிகாரித்து வரும் வெயில் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எங்கு பயணம் மேற்கொண்டாலும் நிழற்குடை கிடைக்குமா என்ற ஏக்கம் தான் அதிகம். கூடவே பார்க்கும் இடத்தில் எல்லாம் சில்லுனு தண்ணீர் கிடைக்குமா..? மோர் கிடைக்குமா..? ஜூஸ் குடிக்கலாமா என்ற எண்ணம் தான் மேலோங்கி உள்ளது. 

ஒரு பக்கம் வெள்ளிரிக்காய், இளநீர், கரும்புசாறு, மற்றும் பழச்சாறு போன்றவற்றின் விற்பனை சூடு பிடித்து உள்ளது.இதற்கிடையில் சாதாரண மக்கள் முதல் கோடீஸ்வர மக்கள் வரை, கோடைகாலம் வந்தாலே மண்பானையை தேடி அலையும் நிலை உருவாகி உள்ளது.

மண்பானையில் மேலும் ஒரு சிறப்பு அம்சமாக, பிளாஸ்டி பைப்  பொருத்தி விற்கிறார்கள். இதன் மூலம் பயன்படுத்துவதற்கு ஏதுவாக உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கேன்களில் இருந்து எளிதாக தண்ணீர் பிடிப்பது போலவே, மண்பானையில் இருந்து எளிதாக தண்ணீர் பிடித்து குடிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், பிரிட்ஜில் வைத்த குளிர்ந்த தண்ணீரை குடித்தால் சளி, காய்ச்சல் ஏற்படும். ஆனால் மண்ணால் செய்யப்பட்ட மண்பானையில் தண்ணீர் ஊற்றி வைத்து எத்தனை நாள் கழித்து குடித்தாலும் சளி ஏற்படாது. 

இதனால், சாதாரண நாட்களில் விற்பனையாவதை விட, கோடை காலம் தொடங்கிய உடன் 20 முதல் 30 சதவீதம் மண்பானை விற்பனை அதிகரித்துள்ளது. விலையை பொறுத்த வரை சாதாரண மண்பானை ரூபாய் 100 முதல் 150 எனவும், பைப்பொருத்திய மண்பானை ரூபாய் 250 முதல் 350 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது...

click me!