உங்க வியர்வை நாற்றம் உங்களாலே தாங்க முடியலையா..? கவலைய விடுங்க....இத பண்ணுங்க போதும்...!

By thenmozhi gFirst Published Dec 10, 2018, 4:49 PM IST
Highlights

வெளித்தோற்றத்திற்கு அழகாக ஸ்டைலாக இருப்பது முக்கியமல்ல. உடலில் துர்நாற்றங்கள் ஏற்படாத வண்ணம் சருமத்தை பராமரிப்பதே முக்கியமான விஷயம்...

வெளித்தோற்றத்திற்கு அழகாக ஸ்டைலாக இருப்பது முக்கியமல்ல. உடலில் துர்நாற்றங்கள் ஏற்படாத வண்ணம் சருமத்தை பராமரிப்பதே முக்கியமான விஷயம்... கண்ணிற்கு அழகாக தோற்றமளித்து அருகில் வரும் போது துர்நாற்றத்தால் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுவது மிகவும் வருந்ததக்க விஷயம். இந்த வியர்வை நாற்றத்தால் மனம் சங்கடம் மட்டுமல்லாமல், நம்மிடம் பேச வருபவர்கள் கூட சற்று விலகி செல்வார்கள்.

பொதுவாகவே நம் உடலில் ஏற்படும் துர்நாற்றத்திற்கு நம் மனம் மற்றும் உடல் இரண்டுமே காரணமாகும். நம் மனதில் ஏற்படும் பலவகை உணர்சிகளின் காரணமாகவே வியர்வை நாற்றம் ஏற்படுகிறது. அதிக சந்தோசம், அதிக துக்கம், அதிக பதற்றம், அதிக செக்ஸ் உணர்வு போன்றவை ஏற்படும் போது மனநிலை கட்டுப்பாட்டை மீறுகிறது. இந்த நேரம் சுரப்பிகள் வேகமாய் செயல்படுகின்றன. அந்த திரவத்தில் பாக்டீரியாக்கள் சேர்கின்றன. அதன் கூடவே வியர்வையும் சேர்வதால் தான் நம்மால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு நாற்றம் ஏற்படுகிறது.

மேலும் நாம் உண்ணும் உணவை பொறுத்தும் சுரக்கும் சுரப்பிகளின் நாற்றம் ஏற்படுகிறது. கிராம்பு ஏலக்காய், கருவாப்பட்டை, வெங்காயம், பூண்டு மற்றும் சில வகை மீன்களை அதிகம் சாப்பிட்டால் உடல் திரவத்தின் நாற்றம் அதிகமாக இருக்கும். குண்டுப்பெண்களிடம் பாக்டீரியாக்கின் செயல்பாடு அதிகமாய் இருப்பதால் அதிக நாற்றம் ஏற்படும். நீரிழவு நோய் உழவர்களிடமும் பாக்டீரியாக்களின் செயல்பாடு காரணமாக துர்நாற்றம் அதிகம் ஏற்படும்.

சரி வியர்வை நாற்றத்தை எப்படி கட்டுப்படுத்துவது ன் என்பதை பார்க்கலாம் வாங்க..! 

கீரைகள்,  ஆரஞ்சு பழம், அன்னாசிப்பழம், ஆகியவற்றை  நிறையப் சாப்பிடுங்கள். இவற்றிலுள்ள  நார்சத்து திரவ உற்பத்தியை குறைக்கும் தன்மை கொண்டதால் துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்கப்படும். உடலில் அதிக வியர்வை உள்ள பகுதிகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவி பவுடர் பூசிக்கொள்ள வேண்டும்.

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் 

பாக்டீரியாக்களின் செயல்பாட்டை குறைக்க தினமும் இரவும் பகலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். உடலை மட்டும் சுத்தமாக வைத்தால் போதாது. உடையிலும் சுத்தம் தேவை. முக்கியமாக உள்ளாடைகள் அதிக சுத்தமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் சொறி சிரங்கு அரிப்பு போன்ற சரும நோய்கள் ஏற்பட்டு அவ்விடங்களில் சிவந்தும் தடிப்பு ஏற்பட்டும் எரிச்சல் உண்டாக்கும். காட்டன் துணி வகைகள் வியர்வையை உறிஞ்சி எடுக்க ஏற்றவை. ஆதலால் பெரும்பாலும் காட்டன் துணியை உடுத்துதல் நல்லது. மனதை எப்போதும் அமைதியாக வைத்திருக்க வேண்டும். உணர்ச்சிகளை எப்போதும் எல்லை மீற விடக் கூடாது.

பாக்டீரியாக்களை ஒழிக்கும் சோப்பையே பெரும்பாலும் பயன்படுத்த வேண்டும். உள்ளங்கால் பகுதி சிலருக்கு அதிக வியர்வை கொடுக்கும். அவ்வாறானவர்கள் காற்று படும்படியான செருப்புகளையே அணிய வேண்டும். இறுக்கமான ஷூக்களை அணிய கூடாது. ஷூ அணியும் போது தினமும் சாக்ஸ் துவைத்து அணிய வேண்டும். பிளாஸ்டிக் ரப்பர் செருப்புகளை அணிய கூடாது. கை கால்களை சுத்தமான நீரால் சோப் உபயோகித்து கழுவி, சுத்தமான துண்டால் துடைத்து விரகளுக்கிடையில் பவுடர் பூச வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் உடல் நாற்றத்திலிருந்து விடுதலை பெறலாம்.

click me!