வாய் துர்நாற்றமா..? ஒரே நிமிடத்தில் போக்க சூப்பர் வழி இதோ..!

By thenmozhi gFirst Published Dec 7, 2018, 7:12 PM IST
Highlights

பற்கள் சரியாக அமையா விட்டால் வாய் நாற்றம் வரும். பட்டிணியாக இருக்கும் போதும்  சிலருக்கு வாய் துர்நாற்றம் ஏற்படும். உடைந்த பற்கள், ஈறு நோய், பற்களின் இடுக்குகளில் இருக்கும் உணவு துணுக்குகள் ஆகியவையும் வாய் நாற்றத்திற்கு காரணமாகும்.

நமது உமிழ்நீரில் வாழும் கிருமிகள் காரணமாக, வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. சைனசைடிஸ், டான்சிலைடிஸ், அல்சர் போன்ற நோய்களின் காரணமாகவும் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது.வாய் நாற்றம் இருப்பதாக உணர்ந்தால் லேசான சுடுநீரில் சிறிதளவு உப்பு போட்டு வாய் கொப்பளிப்பது சிறந்தது. வாய் நாற்றம் ஏற்பட்டால் முதலில் எதனால் ஏற்பட்டது என்று  கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்க வேண்டும்.

மாங்காய், கரும்பு, அன்னாசிப்பழம் ஆரஞ்சு பழம் போன்றவை பற்களுக்கு வலுவூட்டும் உணவு வகைகள் ஆகும். இவற்றை பற்களால் கடித்து சாப்பிடுதல் நல்லது.வாய் நாற்றம் இல்லாமல் தடுப்பதற்கு சாப்பிட்ட பிறகு பல் துலக்காவிட்டாலும் வாயை நன்றாக கழுவி கொப்பளிப்பதையாவது அவசியம் செய்ய வேண்டும்.

click me!