10 நிமிடத்தில் கண்சொர்வை இப்படியும் அகற்றலாமா..? அலுவலகத்தில் கூட இதை செய்யலாம்....

By thenmozhi gFirst Published Dec 7, 2018, 1:00 PM IST
Highlights

நம் கண்கள் நமக்கு எந்த அளவிற்கு முக்கியம் என்பதை சொல்லியா தெரிய வேண்டும்.. கண் இல்லை என்றால் நம்மால் என்னதான் செய்ய முடியும்.. பிறவியிலேயே கண்பார்வை இல்லாமல் இருப்பது வேறு.... ஆனால் கண்களுக்கு ஓய்வு கொடுக்காமல், கண்களில் பலப்பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்வது வேறு அல்லவா..

தற்போது உள்ள இயந்திர வாழ்கையில் நாம் பம்பரம் போல் சுழன்றுக்கொண்டிருக்கிறோம்... உடலுக்கு  தேவையான ஓய்வு கொடுக்காமலும், நம் கண்களுக்கு தேவையான் ஓய்வு கொடுக்காமலும் அதாவது...  சரியான நேரத்தில் சரியான தூக்கம் இல்லாமல் கண்கள் சிவந்து மிகவும் எரிச்சல் கொடுக்கும். வேலைப்பளு ஒரு பக்கம் இருந்தாலும், அலுவலக நேரத்தில் கூட உங்கள் கண்களுக்கு நீங்கள் ஓய்வு  கொடுத்து, கண்சொர்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்....அதற்கான சில டிப்ஸ் இங்கே பார்க்கலாம் வாங்க..

கண்களை மூடிக்கொண்டு இரு கைகளையும் கண்களின் மீது குவித்து சிறிது கூட வெளிச்சம் தெரியாமல் இருட்டாக இருக்கும் படி செய்து அந்த இருட்டிலேயே விழிகளை மட்டும் மேல், கீழ் பக்கவாட்டில் என்று அசைத்து பயிற்சி அளிப்பதன் மூலம் கண்களின் சோர்வை அகற்றலாம். கண்களுக்கு சோர்வு ஏற்படும் நேரங்களில் பத்து நிமிட நேரத்துக்கு கண்களை நன்றாக மூடி அமைதியாய் உட்கார்ந்திருந்து, பின்னர் மீண்டும் வேலைகளை கவனிக்கலாம்.

கண் இமைகளின் மீது, ஓர் ஈரத் துணியை வைத்து சிறிது நேரம் ஒத்தி எடுத்தால் கண்கள் குளிர்ச்சி பெறுவதுடன் கண்களுக்கு ஏற்பட்ட சோர்வு நீங்கும்.

click me!