உங்க உடம்பை சும்மா சிக்குன்னு வெச்சிக்க இதை செஞ்சாலே போதும்..!

By thenmozhi gFirst Published Dec 10, 2018, 12:50 PM IST
Highlights

உடல் குண்டானவர்கள் மெலிந்து விட வேண்டும் என்பதற்காக ஒரேடியாக உணவை வெறுத்து பட்டினி கிடக்கக்கூடாது.

உடல் குண்டானவர்கள்  மெலிந்து விட வேண்டும் என்பதற்காக ஒரேடியாக  உணவை வெறுத்து பட்டினி கிடக்கக்கூடாது. உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்க உணவின் அளவை குறைக்க வேண்டும் 
நன்கு வியர்க்கும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். சாப்பிட்ட உடன் ஒரு போதும் தூங்கி விடக்கூடாது. சாப்பிட்டு முடிந்த உடன் இரண்டு மணி நேரம் கழித்தே படுக்க செல்ல வேண்டும்.

அதே போன்று சாப்பாட்டை வேகமாக சாப்பிடக் கூடாது. வாய் நிறைய  அமுக்கிக்கொண்டும் சாப்பிடக்கூடாது... சற்று நிதானமாக சிறிது நேரம் எடுத்து மென்று, சுவைத்து சாப்பிட வேண்டும்.
குண்டானவர்கள் பால் சாப்பிடுவது தவிர்த்து விட வேண்டும். அதே  நேரத்தில் ஆடை நீக்கிய பால் கொழுப்பு நீக்கிய சூப் போன்றவற்றை பருகலாம். எண்ணெய்யில் வறுத்த பொறித்த உணவுகளை சாப்பிட கூடாது.

இடைப்பட்ட நேரங்களில் நண்பர்களிடம் பேசிக்கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ, டி.வி பார்த்துக்கொண்டோ உணவு பொருள்களை கொறிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். கூழ் ட்ரிங்க்ஸ், காபி, டீ போன்றவற்றை அடிக்கடி குடிப்பதை தவிர்த்து விட்டு இளநீர், பழச்சாறு பருகும் பழக்கத்தை எற்படுத்த வேண்டும்.

முதிரிப்பருப்பு, வேர்கடலை, சாஸ், இனிப்பு பல காரங்கள் சாப்பிடுவதை குறைக்க வேண்டும். உடல் குண்டானவர்கள் இது போன்ற உணவு  பொருட்கள் எடுத்துக்கொள்வதை அறவே நிறுத்தி விட வேண்டும் மேற்குறிப்பிட்ட இந்த சில டிப்சை மறவாமல் கடைப்பிடித்து வந்தால், கண்டிப்பாக நம் உடலை நல்ல நிலையில் வைத்துக் கொள்ளலாம்.

click me!