வாழும் வாழ்க்கை ஒரு மாயை..! "அனைத்தும் பஞ்ச பூதங்களில் அடங்கி விடும் ஒரு நாள்"..!

By ezhil mozhiFirst Published Sep 12, 2019, 6:48 PM IST
Highlights

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கப்படுவதன் நம்பிக்கையே மீண்டும் தம் வீட்டிற்கு விநாயகர் வருவார் என்பதே... இன்னும் சற்று விரிவாக பார்த்தோமேயானால்,களிமண் கொண்டு தான் விநாயகர் சிலைகளை செய்வார்கள்.

வாழும் வாழ்க்கை ஒரு மாயை..! "அனைத்தும் பஞ்ச பூதங்களில் அடங்கி விடும் ஒரு நாள்"..! 

நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி இன்றுடன்  முடிவடைவதால் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க தொடங்கியுள்ளனர். 

விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது ஏன்..? 

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கப்படுவதன் நம்பிக்கையே மீண்டும் தம் வீட்டிற்கு விநாயகர் வருவார் என்பதே... இன்னும் சற்று விரிவாக பார்த்தோமேயானால்,களிமண் கொண்டு தான் விநாயகர் சிலைகளை செய்வார்கள். இவ்வாறு செய்யும் போது விநாயகர் சிலையின் வடிவம் மாறினாலும் அதன் ஆற்றலும், சக்தியும் அப்படியே இருக்கும் என்பது நம்பிக்கை 


 
சரி ஏன்.. களிமண்ணால் செய்யப்பட்ட விநாயர் சிலைகளை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்காமல்  நீர்நிலைகளில் கரைத்து விடுகிறார்களே ஏனன்றால்...10 நாட்களுக்கு மேல்  வைக்கும் போது அதன் தன்மையும், சக்தியும் குறைந்து விடும் என்பதால் நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது

அதே வேளையில் ரசாயனம் பயன்படுத்தப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் போது மாசுபடும் என்பதால் செயற்கை குளங்களை உருவாக்கி அதில் விநாயகர் சிலைகளை கரைப்பதையும் பார்க்க முடிகிறது.

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், நம் உடல் பொருள் செய்யும் செயல் அனைத்தும் ஒரு மாயையே... இவை அனைத்தும் ஒரு ஆனால் பஞ்ச பூதங்களில் அடங்கி விடும் எனபது தான் உண்மை..!

click me!