களத்தில் இறங்கினார் இஸ்ரோ சிவன்...! ஓவர் நைட்டில் உயிர் கொடுத்து அதிரடி..!

By ezhil mozhi  |  First Published Sep 12, 2019, 5:12 PM IST

ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்து தன்னுடைய கடின உழைப்பால் சிவன் இன்று இஸ்ரோ தலைவராக உயர்ந்துள்ளார். 


களத்தில் இறங்கினார் இஸ்ரோ சிவன்...!  ஓவர் நைட்டில் உயிர் கொடுத்து அதிரடி..!  

மிக எளிமையாக அரசு பள்ளியில் படித்து இன்று இஸ்ரோ தலைவராக உள்ள சிவன் தான் படித்த பள்ளியை மறக்காமல் பள்ளியின் வளர்ச்சிக்கு பேருதவி செய்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Tap to resize

Latest Videos

ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்து தன்னுடைய கடின உழைப்பால் சிவன் இன்று இஸ்ரோ தலைவராக உயர்ந்துள்ளார். இவர் எப்போதும் தன்னுடைய சொந்த கிராமமான கன்னியாகுமரி மாவட்டம் சரக்கல்விளைக்கு செல்லும் போது அங்கு வயல்வெளிக்கு சென்று தன்னுடைய நண்பர்களுடன் பேசி மகிழ்வார். பின்னர் தன்னுடைய பூர்வீக வீட்டிலேயே தங்கி இருப்பதும் வழக்கம்.

இந்நிலையில் அவர் படித்த அரசு பள்ளியில் 15 மாணவர்கள் மட்டுமே இருப்பதால் விரைவில் அப்பள்ளி மூடப்படும் என்ற செய்தி அவர் காதில் எட்டவே, உடனடியாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு இஸ்ரோவின் வணிக பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்ரேஷனுக்கு பரிந்துரைத்துள்ளார். இந்த பரிந்துரையை ஏற்று முதற்கட்டமாக 40 லட்சம் நிதி உதவி அளித்து புதிய கட்டிடம் கட்டப்பட்டு ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் இந்த வருடம் 69 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். இஸ்ரோ தலைவர் சிவன் படித்த பள்ளி என்பதால் அந்த கிராம மட்டுமின்றி, சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் இந்த பள்ளிகளில் சேர்ந்து படிக்க ஆர்வம் காண்பிக்கின்றனர்.

நிலவில் சந்திராயன்-2 தரையிறங்கும் நிகழ்வைக் காண கிராம மக்களே அன்று இரவு தொலைக்காட்சியின் முன் அமர்ந்து காத்திருந்ததாகவும்... பிரதமர்மோடி அவர்கள் கிளம்பும்போது துக்கம் தாங்காமல் சிவன் அழுத காட்சியை தொலைக்காட்சியில் பார்த்த அந்த தருணமம் ஒட்டுமொத்த கிராம மக்களையும் அழுகையில் மூழ்க வைத்தது என புலம்பி தள்ளுகின்றனர் கிராம மக்கள்

click me!