அனுப்பியாச்சு சுற்றறிக்கை..! இனி குழந்தைகளை காப்பது நம் பொறுப்பு..!

By ezhil mozhiFirst Published Sep 12, 2019, 6:30 PM IST
Highlights

சென்ற ஆண்டு டெங்கு மற்றும் மற்ற பிற வைரஸால் பெருமளவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகினர். 

அனுப்பியாச்சு சுற்றறிக்கை..! இனி குழந்தைகளை காப்பது நம் பொறுப்பு..! 

அனைத்து பள்ளிகளுக்கும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலில் இருந்து தப்பித்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், "வகுப்பறையை சுற்றி தண்ணீர் தேங்கி இருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும் ..டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்கும் பொருட்டு பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்.. பள்ளிகளில் தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்.. பள்ளிகளில் தினமும்  நடக்கும் காலை வணக்கம் கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்" என குறிப்பிடப்பட்டு உள்ளது. 

சென்ற ஆண்டு டெங்கு மற்றும் மற்ற பிற வைரஸால் பெருமளவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகினர். இந்த நிலையில் மழைக்காலம் தொடங்கியுள்ள தருணத்தில் டெங்கு வருவதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதால் அதனை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியில் மாணவர்கள் மத்தியில் டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் மிக முக்கியமாக பள்ளியிலோ அல்லது பள்ளியை சுற்றி உள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருந்தால் உடனடியாக அதனை அகற்றிவிடவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மிக குறிப்பாக பகலில் கடிக்கும் கொசுவினால் டெங்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இதுகுறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்து உள்ளார். 

கடந்த 2 மாதங்களுக்கு முன்பாகவே டெங்கு குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதாலும் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தும் பொருட்டு இந்த சுற்றறிக்கை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு சில மருத்துவமனைகளில் டெங்குவால் பாதிக்கப்பட்ட வர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது கூடுதல் தகவல்.

click me!