Walking For Weight Loss : ஒரு கிலோமீட்டர் நடைபயிற்சி சென்றால் உடலில் எவ்வளவு கலோரிகளை எரித்து எடையை குறைக்கலாம் என இந்த பதிவில் காணலாம்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஆரோக்கியமான உணவு பழக்கமும், உடற்பயிற்சியும் மேற்கொள்வது அவசியமாகிறது. சிலருக்கு கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முடியாது. அவர்களுக்கு மிதமான உடற்பயிற்சியாகவும், எடையை குறைப்பதில் சிறந்த பயிற்சியாகவும் நடைபயிற்சி விளங்குகிறது. இது இதய ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு சுவாச மண்டலத்தையும் நன்றாக இயங்க வைக்கிறது.
1 கிமீ நடந்தால் எவ்வளவு கலோரிகள் எரிக்கப்படும் தெரியுமா?
undefined
ஒரு கிலோமீட்டர் நடப்பதால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான எடை இழப்பு இருக்கும். ஒருவர் நடக்கும் தூரம், வேகம், உடல் எடை போன்றவற்றை பொறுத்து எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கையும் மாறுபடும். வாக்கிங் செல்லும் போது எந்தெந்த தவறுகளை செய்வதால் எடை இழப்பு பயணம் பாதிக்கப்படுகிறது என்பதை இங்கு காணலாம்.
உடல் எடை:
நடைபயிற்சி மேற்கொள்பவர்களின் உடல் எடை அவர்களின் கலோரிகளை எரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உடல் பருமன் அதிகம் கொண்டவர்களுக்கு வாக்கிங் செல்வதால் அதிக கலோரி எரிக்கப்படுகிறது. ஏனென்றால் அவர்கள் நடக்கும் போது அதிக ஆற்றலை செலவழிப்பார்கள். நடைபயிற்சி மேற்கொள்வது அவர்களுக்கு எளிய காரியமாக இருக்காது. எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் 100 கிலோ எடையுள்ள ஒருவர் நடப்பதற்கும், 70 கிலோ எடையுள்ள ஒருவர் நடப்பதற்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. இதில் 70 கிலோ எடையுள்ளவர் ஒரு கிலோமீட்டர் நடக்கும்போது 90 கிலோ எடையுள்ளவரை விட குறைவான கலோரிகளை தான் இருக்கிறார்.
இதையும் படிங்க: சைக்கிளிங் vs வாக்கிங் : எடை இழப்புக்கு எது பெஸ்ட்?
நடையின் வேகம்:
நடைபயிற்சி மேற்கொள்ளும் போது நாம் எவ்வளவு வேகமாக நடக்கிறோம் என்பதும் கலோரிகளை எரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு மணி நேரத்தில் 3 முதல் 4 கிமீ வாக்கிங் செல்வதைவிட அதே நேரத்தில் 5 கிமீ முதல் 6 கிமீ வரை வாக்கிங் சென்றால் அதிகமான கலோரிகளை எரிக்கலாம். வேகமாக நடப்பது உடலில் அதிக ஆற்றலை பயன்படுத்த காரணமாக இருக்கும். வேகமாக நடந்தால் உங்களுடைய இதய துடிப்பும் அதிகமாக இருக்கும்.
இதையும் படிங்க: வாக்கிங்'ல 5 வகைகள் இருக்கு.. எந்த வகை கூடுதல் பலனளிக்கும் தெரியுமா?
நடைபயிற்சி செல்லும் இடம்:
நாம் எந்த இடத்தில் நடக்கிறோம் என்பதும் உடலில் உள்ள கலோரிகளை எரிப்பதில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் நடக்கும் நிலப்பரப்பு உங்களுடைய உடல் எடை குறைப்பில் பங்கு வைக்கிறது. சமதள பரப்பில் நடப்பதை காட்டிலும் ஏற்றமாக உள்ள படிக்கட்டுகள், மலைகளில் ஏறுவது அதிக ஆற்றலை கோரி நிறைய கலோரிகளை எரிக்கலாம்.
குறைந்த வயது vs அதிக வயது
உங்களுடைய வயது கேற்றபடி வளர்சிதை மாற்றமும் மாறுபடுகிறது. வயது அதிகரிக்க அதிகரிக்க வளர்ச்சிதை மாற்றம் குறைய தொடங்குகிறது. வயதானவர்கள் வாக்கிங் செல்லும்போது இழக்கும் கலோரிகளை விட இளையோர் அதிகமான கலோரிகளை எரிக்க முடியும். பெண்களை விட ஆண்கள் அதிகமான கலோரிகளை இழக்கிறார்கள். ஏனெனில் ஆண்களுக்கு பெண்களைவிட தசை நிறை (muscle mass) அதிகம் இருக்கும்.
கலோரி குறித்த தகவல்கள்:
இதில் ஒவ்வொருவரின் நடையின் வேகம், உடல் எடை, நடக்கும் தூரம் ஆகியவற்றைப் பொறுத்து சுமாராக 5 கிராம் முதல் 310 கிராம் வரை எடை இழப்பு இருக்கும். இவை அனுமானிக்கப்பட்ட தகவல். நபருக்கு நபர் மாறுபடலாம்.
அதிக கலோரிகளை எரிக்க செய்யவேண்டியவை;
உங்களுடைய உடலில் அதிகமான கலோரிகளை எரிக்க விரும்பினால் வேகமாக நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். வேகமாக நடப்பது இதய துடிப்பை அதிகமாக்கி கலோரிகளை அதிகம் எரிக்க உதவுகிறது. வாக்கிங் செல்லும் போது இடையிடையே ஓடுவது உடலுக்கு நல்ல பயிற்சியாகவும் கலோரிகளை எரிக்கவும் உதவும். ஒரே மாதிரியான நிலப்பரப்பிலே நடக்காமல் அவ்வப்போது சீரற்ற நிலப்பரப்பான மலைப்பாதைகளில் நடந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். நாள்தோறும் ஒரே தூரத்திற்கு நடைபயிற்சி மேற்கொள்ளாமல் கொஞ்சம் கூடுதல் மீட்டர்கள் நடக்க முயற்சி செய்யலாம். இப்படி செய்வது எடையை குறைக்க அதிக கலோரிகளை எரிக்க உதவும்.