காபி குடித்தால் மாரடைப்பு வராதா? ஆய்வு சொல்லும் உண்மை!! எப்படி காபி குடிக்கலாம்?

By Kalai Selvi  |  First Published Dec 24, 2024, 12:26 PM IST

Coffee And Heart Health :  அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க ஆய்வு ஒன்றில் அளவாக காபி குடிப்பதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என தெரியவந்துள்ளது. 


காபி மாலை நேரத்தில் குடிப்பதால் இரவு தூக்கம் பாதிக்கும் என்பார்கள். இதில் உள்ள காபின் என்ற பொருள் உடலுக்கு அவ்வளவாக நன்மை செய்யக் கூடியது அல்ல என்பதும் ஒரு கூற்று.  ஆனால் அளவாக காபி குடிப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படும் என்பது யாரும் அறியாதது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (American heart association) செய்த 3 இதய நோய்க்கான ஆய்வுகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. காபி குடிப்பதால் மாரடைப்பு போன்ற இதய செயலிழப்பு அபாயத்தைக் குறைக்கலாம் என ஆய்வு கூறுகிறது. 

இதய நோய் காரணங்கள்: 
  
இதய நோய்க்கான காரணமாக புகைபிடித்தல், வயது, உயர் இரத்த அழுத்தம் போன்றவை சொல்லப்பட்டாலும் இதய நோய் வருவதற்கு இன்னும் சில அடையாளம் காணப்படாத காரணங்களும் உள்ளதாக அமெரிக்க ஆய்வை மேற்கொண்ட மூத்த ஆசிரியரான டேவிட் பி. காவ் கூறியுள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

காபி குடிப்பதால் ஏற்படும் விளைவுகளை ஆய்வு செய்ய 4 வகையான மாதிரிகளை தேர்வு செய்தனர். அதில் ஒரு நாளைக்கு 0 கப் காபி எனவும், ஒரு நாளைக்கு 1 கப் காபி எனவும், ஒரு நாளைக்கு 2 கப் காபி எனவும், ஒரு நாளைக்கு 3 கப் காபி என்றும்  கொடுத்தனர். இந்த ஆய்வு முடிவுகளில் காபி அருந்தாதவர்களைவிடவும் 1 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் காஃபின் உள்ள காபி அருந்தியவர்களுக்கு  நீண்டகாலமாக இதய செயலிழப்பு நோய் அபாயம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க:   குளிர்காலத்தில் மாரடைப்பு அதிகமா வர இதுதான் காரணம்; உஷாரா இருங்க!!

காபின் என்ற பொருள் நீக்கப்பட்ட காபியை அருந்துவதால் இதய செயலிழப்பு ஆபத்தில் எதிர் விளைவுகள் தான் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக செய்யப்பட்ட கார்டியோவாஸ்குலர் ஹெல்த் ஆய்வில், காஃபின் நீக்கம் செய்யப்பட்ட காபியை அருந்துபவர்களுக்கு இதய செயலிழப்பு வரும் அபாயம் அதிகரிப்பதும் அல்லது குறைவதும் இல்லை என தெரியவந்துள்ளது. 

இதையும் படிங்க:  இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகள்; கண்டிப்பா சாப்பிடுங்க!

காபி குடிப்பதால் அதில் உள்ள காஃபின் மறைமுகமாக எடுத்து கொள்ளப்படுகிறது. இது நம்முடைய இதயத்திற்கு அவ்வளவு நல்ல பலன்களை தருவதில்லை என மக்கள் நினைத்து வருகிறார்கள். ஆனால் காஃபின் எடுத்து கொள்பவர்களுக்கு இதய செயலிழப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு என ஆய்வுகள் கூறுகின்றன. ஆனாலும் உடற்பயிற்சி செய்தல், புகைபிடித்தலை நிறுத்துவது, உடல் எடையைக் குறைப்பது ஆகியவை போல இதய நோய் ஆபத்தைக் குறைக்க காபி குடிப்பது நல்ல பலனை தரும் என பரிந்துரைக்க இன்னும் போதுமான தெளிவான சான்றுகள் இல்லை என்றே ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இவை இப்போதைக்கு ஆய்விகளின் அடிப்படையில் அனுமானமாக தான் உள்ளன. 

கூட்டாட்சி உணவு பரிந்துரைகளின்படி, ஒரு நாளைக்கு 3 முதல் ஐந்து அவுன்ஸ் கப் காபி மட்டுமே ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. அதுவும் பால் கலக்காத வெறும் கருப்பு காபிதான். பால் கலந்த காபியை சொல்லவில்லை. குறிப்பாக குழந்தைகள் காஃபின் எடுத்து கொள்ளவே கூடாது என அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் வலியுறுத்துகிறது. 

இந்த ஆய்வுகள் இதய நோய் ஏற்படாது என சொல்வதன் காரணத்தை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க இயலவில்லை என சொல்கிறது. அதே சமயம் மேலே சொல்லப்பட்ட மூன்று ஆய்வுகள் காபி அருந்துவதால் இதய செயலிழப்பு வருவதற்கான அபாயம் குறைவு என்றும் குறிப்பிடுகிறது. காபியில் சர்க்கரை, பால் சேர்க்காமல் வெறும் கருப்பு காபியை அருந்தினால் ஆரோக்கியமான பழக்கம் என்றும் ஆய்வு குறிப்பிடுகிறது. 

காபி குடிக்கும் பழக்கம் இருந்தால் உங்களுடைய உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பால் உணவுகள், சோடியம், நிறைவுற்ற கொழுப்பு போன்ற இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் உணவுகளை எடுத்து கொள்ளுங்கள். அளவாக காபி அருந்துங்கள்.  சர்க்கரை சேர்க்காமல் இருப்பது நல்லது. இதில் உள்ள அதிகப்படியான காஃபின் நடுக்கம், தூக்கக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

click me!