Silver Water Bottle Cleaning Tips : சில்வர் வாட்டர் பாட்டிலை எளிதாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.
தற்போது சில்வர் வாட்டர் பாட்டில் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகம் உள்ளன. இந்த பாட்டிலை எவ்வளவுதான் சுத்தம் செய்தாலும் அதில் ஒரு விதமான நாற்றம் எப்போதும் அடித்துக் கொண்டே இருக்கும். முக்கியமாக, மழைக்காலத்தில் வெயில் அவ்வளவாக இருக்காது. எனவே பாட்டிலை வெயிலில் காய வைக்க முடியாது. இத்தகைய சூழ்நிலையில் சில்வர் வாட்டர் பாட்டிலை எளிதாக சுத்தம் செய்வது எப்படி என்றும், அதுவும் குறிப்பாக, வாட்டர் பாட்டிலில் உள்ளே எந்த பொருளை போட்டு சுத்தம் செய்தால் துர்நாற்றம் அடிக்காது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சில்வர் வாட்டர் பாட்டிலை சுத்தம் செய்ய தேவையான பொருட்கள்:
undefined
சூடான நீர்
கல் உப்பு - சிறிதளவு
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
பாத்திரம் கழுவும் லிக்விட் - சிறிதளவு
இதையும் படிங்க: வாட்டர் பாட்டில்களை சரியாக சுத்தம் செய்வது எப்படி? இப்படி பண்ணா அடியில் பாசி படியவே படியாது!!
சில்வர் வாட்டர் பாட்டிலை சுத்தம் செய்யும் முறை :
இதற்கு முதலில் வாட்டர் பாட்டில் உள்ள எலுமிச்சை சாறு கல் உப்பு, சூடான நீர், பாத்திரம் கழுவும் லிக்விட் ஆகியவற்றை போட்டு சுமார் அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு வாட்டர் பாட்டில் கழுவும் ஒரு பிரஷ் கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். இப்படி செய்தால் பாட்டில் உள்ளே இருக்கும் அழுக்குகள் நீங்கும் மற்றும் துர்நாற்றமும் அடிக்காது. அதுபோல பாட்டிலின் வாய்ப்பகுதில் கிருமிகள், பாக்டீரியாக்கள் அதிகம் தங்குவதால் ஒரு நார் கொண்டு அதை நன்றாக தேய்த்து சுத்தம் செய்யுங்கள்.
வாட்டர் பாட்டில் கழுவும் போது அதன் மூடியையும் சுத்தம் செய்யுங்கள். ஏனெனில் அவற்றிலும் அழுக்குகள், கிருமிகள் தாங்கும். இதற்கு மேலே சொன்ன பொருட்களை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் பாட்டில் மூடியை போட்டு சுமார் 15 நிமிடம் ஊற வைத்துவிட்டு பிறகு ஒரு பிரஷர் நன்கு தேய்த்து கழுவினால், பாட்டில் மூடியில் இருக்கும் அழுக்குகள் நீங்கிவிடும்.
இதையும் படிங்க: தங்க பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் நீடா அம்பானி! பிஜி தீவில் இருந்து வரும் ஸ்பெஷல் வாட்டர்!
நினைவில் கொள் :
- குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் அவர்களது பாட்டிலில் தண்ணீர் இருந்தால் அதை கொட்டி விட்டு பாட்டிலில் உள் பகுதி நன்றாக காய வைக்கவும். அப்போதுதான் வாட்டர் பாட்டிலில் துர்நாற்றம் அடிக்காது.
- உங்களால் முடிந்தால் வாட்டர் பாட்டிலை சுமார் 2 மணி நேரம் வெயிலில் நன்றாக காய வைத்து பயன்படுத்துங்கள்.
- அதுபோல வாட்டர் பாட்டில் நன்றாக காய்ந்த பிறகு அதனுள் ஒரு ஸ்பூன் சர்க்கரை போட்டு மூடி வைத்தால் துர்நாற்றம் அடிக்காது.