நாளை முதல் பயங்கர அனல் காற்று வீசும் அபாயம்..! எச்சரிக்கை மக்களே..!

By ezhil mozhiFirst Published Apr 2, 2019, 3:10 PM IST
Highlights

கோடை காலம் தொடங்கி விட்டதால் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் மக்களை பாடாய் படுத்த தொடங்கி உள்ளது. 
 

கோடை காலம் தொடங்கி விட்டதால் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் மக்களை பாடாய் படுத்த தொடங்கி உள்ளது. 

பொதுவாகவே கோடைகாலம் என்றால் ஆண்டுக்கு ஆண்டு வெப்பநிலை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் கோடை காலம் தொடங்கி உள்ள ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் அதிகபட்சமாக கரூரில் கரூரில் 107 டிகிரியும் கோவை திருப்பூர் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில்102 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. வேலூரில் 104 டிகிரி காரணம் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் நாளை முதல் தமிழகத்தில் அனல் காற்று வீசத் தொடங்கும் என்றும், அது நாளுக்கு நாள் அதிகரித்து மே மாதம் முழுவதுமே அதிக அளவு அனல் காற்று உணரமுடியும் என்றும் சென்னை வானிலை ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. வரும் ஜூன் மாதம் வரை இதே நிலை நீடிக்கும் என கூறப்பட்டு உள்ளது.

 

எனவே, வெளியில் பயணம் செய்யும் மக்கள் காலை நேரத்திலேயே கிளம்பி செல்லக்கூடிய இடத்தை அடைந்து விடுவது நல்லது. இல்லை என்றாலும் எப்போதும் தன் கையில் குடை வாட்டர் பாட்டில் வைத்திருக்க வேண்டும். அதேபோன்று வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியூட்டும் உன் பண்டங்களை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. அந்த வகையில் பழச்சாறு தர்பூசணி இளநீர் மோர் தயிர் நுங்கு அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். வெள்ளரிக்காய் கீரை வகைகள் உள்ளிட்டவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

இவை தவிர்த்து கோடை காலத்தில் ஒரு சில உணவுப் பொருட்களை தவிர்க்கலாம் அதில் குறிப்பாக உருளைக்கிழங்கு ,கத்திரிக்காய், மாமிச உணவுகள், மாங்காய், அடிக்கடி வீட்டில் காரக்குழம்பு செய்வது இவற்றையெல்லாம் தவிர்ப்பது நல்லது.

click me!