Horoscope: துலாம், கன்னி ராசியினர் அதிர்ஷ்டத்தின் மறு பிறப்பாய் இருப்பார்கள்...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்...

By Anu Kan  |  First Published Apr 24, 2022, 5:00 AM IST

Horoscope: ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களின் குணாதிசயங்கள் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.  சில ராசி காரர்கள் பிறக்கும் போதே அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.


ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களின் குணாதிசயங்கள் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.  சில ராசி காரர்கள் பிறக்கும் போதே அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். இவர்களது அதிர்ஷ்டத்தின் விளைவால், இவர்கள் மட்டுமல்லாமல், இவர்களை சார்ந்தவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மேஷம்: 

Tap to resize

Latest Videos

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்ப்பதை விட லாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். 

ரிஷபம்: 

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள்சிறப்பான பலன்களை தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அலைச்சல் உண்டாகும். கணவன்- மனைவி இடையே அன்னோன்யம் அதிகரிக்கும்.  வெளியூர் பயணத்திற்கு திட்டமிடுவீர்கள். 

 மிதுனம்: 

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள்சிறப்பான பலன்களை தரும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். விட்டு சென்ற உறவுகளுக்குஉங்களை தேடி வரும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். . கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருக்கும்.

கடகம்: 

கடகத்தில் பிறந்தவர்களுக்கு ஆடம்பர செலவுகளை தவிர்ப்பீர்கள். தடைப்பட்ட சுப காரியத்தில் வெற்றிகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் காணப்படும். . உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும் யோகம் உண்டு. விருந்தினர் வருகை இருக்கும். 

சிம்மம்: 

சிம்மத்தில் பிறந்தவர்கள் சிறப்பான பலன்களை பெறுவார்கள். இந்த நாள் எதிர்பாராத திடீர் மாற்றம் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். புதிய உத்திகளை கையாளுவதன் மூலம் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். 

கன்னி: 

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பான இருக்கும். புதிய நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு லாபம் உண்டாகும்.

துலாம்: 

துலாத்தில் பிறந்தவர்களுக்கு புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சமூகத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு குடும்பத்தினருடைய ஆதரவு கிடைக்கும். சுய தொழிலில் ஏற்றம் உண்டு. 

விருச்சிகம்: 

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் நஷ்டங்கள் ஏற்படும். ஆன்மிக பயணம் செல்வீர்கள். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு நீங்கும்.

தனுசு: 

தனுசில் பிறந்தவர்களுக்கு மன நிறைவுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். 

மகரம்: 

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தேவையற்ற விஷயங்களில் இருந்து கவனத்தை திசை திருப்புவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத திடீர் நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் அமையும்.  

கும்பம்: 

கும்பத்தில் பிறந்தவர்கள் ஆடம்பர செலவுகளை தவிர்த்து விடுங்கள். கணவன் மனைவிக்கு இடையே மன கசப்புகள் மறையும். சகோதர சகோதரிகளுக்கு இடையே பாச பிணைப்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வருபவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் நடக்கும். 

மீனம்: 

மீனத்தில் பிறந்தவர்களுக்குசுறுசுறுப்பாக செயல்பட்டு வேளைகளை முடிப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான சிந்தனை பிறக்கும்.  பேச்சில் கம்பீரம் ஏற்படும். உறவினர்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். 

மேலும் படிக்க....Horoscope: 30 வருடங்களுக்கு பிறகு நிகழும் சனி பெயர்ச்சி...எந்த 5 ராசிகளுக்கு அதிஷ்டத்தின் கதவுகள் திறக்கும்...

click me!