Horoscope: ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில ராசிக்காரர்கள் பிறப்பிலிருந்தே செல்வச் செழிப்புடன் இருப்பார்கள். சிலர் என்னதான் கடுமையாக உழைத்தாலும், அவர்களுக்கு புகழ் என்பது அவ்வளவு எளிதில் கிடைப்பது இல்லை. யார் யாருக்கு என்னென்ன பலன் என்பதை இந்த பதிவின் முடிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில ராசிக்காரர்கள் பிறப்பிலிருந்தே செல்வச் செழிப்புடன் இருப்பார்கள். அத்தகைய ராசியை உடையவர்கள் மிகவும் இளம் வயதிலேயே பெரும் செல்வத்தையும் புகழையும் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் பிறக்கும்போது, அதிர்ஷ்டம் கிடைத்திருக்கும். சிலரும் என்னதான் கடுமையாக உழைத்தாலும் அவர்களுக்கு புகழ் என்பது அவ்வளவு எளிதில் கிடைப்பது இல்லை. இன்றைய 12 ராசிகளின் பலன்களை தெரிந்து கொள்வோம்.
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாயின் சிறப்பு அருள் எப்போதும் இருக்கும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு வெற்றியாக இருக்கும். மனைவி வழி உறவினரக்ள் ஆதரவாக இருப்பார்கள். பங்கு வர்த்தகம் லாபம் கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நனமையாக இருக்கும். வெளிநாட்டில், இருக்கும் நண்பர்கள் உறவினர்களின் ஆதாயம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி உறவுக்கு சிக்கல் வரலாம்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு தாயாருடன் கருத்து மோதல் வந்து போகும். அலைச்சல், டென்ஷன் இருக்கும். விடா முயற்சிக்கு உரிய வெற்றி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சாதுரியமாக செயல்படுவதன் மூலம் நன்மைகள் உண்டாகும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகமாக இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன விவாதங்கள் வரும். மறைமுக எதிரிகள் முளைப்பார்கள். நீங்கள் உங்களுடைய கடமையில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சலாக செயல்படுவீர்கள். மனதில் பட்டத்தை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவீர்கள். . தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண பிரச்சனை ஏற்படலாம். சில முடிவுகளை எடுக்கக் கூடிய தைரியம் பிறக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நேர்மறையாக செயல்படுவீர்கள். சோம்பல், களைப்பு, நீங்கி சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் மரியாதை கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள்உண்டாகும்.
துலாம்:
எதிலும், வெற்றி மகிழ்ச்சி உண்டாகும். பண வரவும் திருப்தி கரமாக இருக்கும். உங்களுடைய பலநாள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு வெற்றியாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். மூத்த சகோதரர் தக்க சமயத்தில் உதவுவார்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு, உங்கள் செயலில் வேகம் கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும். கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் உண்டாகும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலமான நல்ல பலன்கள் உண்டு. கணவன் மனைவி உறவுக்கு இடையே புரிதல் உண்டாகும். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு செல்வாக்கு கூடும். சாதகமற்ற அமைப்பு என்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண நெருக்கடி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. முடிவுகளில் நிதானத்துடன் செயல்படுங்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு பண வரவு அதிகரிக்கும். வீடு வாங்கும் யோகம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி உறவுக்கு இடையே இருந்து வந்த மனக் குழப்பங்கள் தீரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்கலாம்.