Love Horoscope: உங்க கணவர் என்ன ராசி..? இந்த 4 ராசிக்காரர்கள் மனைவியை ராணியா நடத்துவாங்களாம்..

By Anu Kan  |  First Published Apr 7, 2022, 6:30 AM IST

Love Horoscope: நம்முடைய பாரம்பரிய கலாசாரத்தில், ஜாதக பொருத்தம் பார்த்து பெரும்பாலன திருமணங்கள் முடிவு செய்யப்படுகின்றனர். 


ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசிக்கும் உள்ள நல்ல மற்றும் தீய குணங்கள் மற்றும் இயல்புகள் பற்றி கூறப்பட்டுள்ளன. அதிலும் பெண்கள் தனக்கு வர போகும் கணவர் தங்களை மகா ராணி போல் பார்த்து கொள்வார், கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி காணப்படும். அப்படியாக இந்த ராசி கொண்ட ஆண்கள் உங்களை உள்ளங்கையில் வைத்து மகாராணி போல் தாங்குவார்களாம். யார் யார் அந்த ராசிக்காரர்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

ரிஷபம்:

Tap to resize

Latest Videos

ரிஷபம் ராசி கொண்ட ஆண்கள் தங்கள் மனைவியை மகா ராணி போல பார்த்துக்கொள்வார்கள். இவர்கள் தனது மனைவிக்காக எதையும் செய்ய துணிந்தவர்கள். மிகவும் சிறந்து விளங்கும் இவர்களை பாசத்தில் அடித்துக்கொள்ளவே முடியாதாம். ஆம் அந்த அளவிற்கு உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தினர் மீதும் அதிக அக்கறையுடன் செயல்படுவார்களாம். குடும்பம், கடமை, புத்திசாலித்தனம் என அனைத்திலும் சிறந்து விளங்குவார்களாம்.

மகரம்:

மகரம் ராசி கொண்ட ஆண்கள் தனது மனைவியை உள்ளங்கையில் வைத்து தாங்குவார்களாம்.தங்கள் மனைவிக்காக எதையும் செய்ய துணிந்தவர்கள். அனைத்து செயல்களிலும் மிகவும் சிறந்து விளங்கும் இவர்களை பாசத்தில் அடித்துக்கொள்ளவே முடியாதாம்.மேலும்,  உங்கள் முன்னேற்றத்தில்  சிறந்தவர்களாக இருப்பார்கள். 

மீனம்:

இவர்கள் எந்த ஒரு விஷயத்திலும், மனைவிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். நேர்மறையான சிந்தனை அதிகமாக இருக்கும் இவர்கள் எப்பொழுதும் பாஸிட்டிவாக இருப்பார்கள் இவர்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் மனைவிக்கு துணை நின்று அவர்களை வழிநடத்துவார்கள். 

துலாம்:

மிகவும் துடிப்பாகவும், அதிக அக்கறையுடனும் இருக்கும் இவர்கள் தங்களது துணையையே திகைக்க வைக்கும் அளவிற்கு திறமை வாய்ந்தவர்கள். மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த வாழ்க்கையை உறுதி செய்ய விரும்பினால் துலாம் ராசி ஆண்களை தெரிவு செய்யலாம். துலாம் ராசி ஆண்களை  விரும்புபவர்கள் அதிர்ஷ்சாலிகளாக கருதப்படும் நிலையில் மறக்க முடியாத தருணங்களை அன்பினால் அள்ளிக் கொடுப்பவர்கள்.

மேலும் படிக்க ,,,,Horoscope: சனி பகவானின் வக்ர பார்வையில் இருந்து தப்பிக்கும் 4 ராசிகள்...இன்றைய ராசி பலன்..!

click me!