
முகத்தின் அழகை, மென் மேலும் மெருகூட்டுவது என்பது சிரிப்புதான். அப்படி, சிரிக்கும் போது பற்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், பார்ப்பவர் உங்களை குறைத்து மதிப்பிட கூடும்.
இதனால், பலரும் பல டூத் பேஸ்ட்டை பயன்படுத்தியும் இந்த பற்களின் மஞ்சள் கரையை போக்க முடியாமல் தவிப்பதுண்டு. சிலர் எதுவும் வேலைக்கு ஆகவில்லை எனில், நேராக பல் மருத்துவரிடம் சென்று செயற்கை முறைகளை பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள்.
பொதுவாக பற்கள் மஞ்சளாக காணப்படுவதற்கு வயது, பரம்பரை காரணிகள், முறையற்ற பல் பராமரிப்பு, அதிக அளவில் டீ மற்றும் காபி குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்றவைகளே காரணங்களாகும்.இதனால் பலர் தங்கள் பற்களை வெண்மையாக வெளிக்காட்ட, பல் மருத்துவமனைக்கு சென்று பணம் செலவழித்து ப்ளீச்சிங் செய்து வெள்ளையாக்குவார்கள். இப்படி செய்வதால், பற்கள் வெண்மையடையும் ஆனால் அதன் ஆரோக்கியம் குறைந்துவிடும்.
கவலையை விடுங்கள்! இந்த எளிய இயற்கை முறையில் பற்களில் படிந்திற்கும் மஞ்சள் கறையை போக்க முடியும்.
பற்களின் மஞ்சள் நிறத்தை நீக்கும் விட்டு வைத்திய குறிப்புகள்:
கிராம்பு:
பல் வலியைப் போக்க கிராம்பு எண்ணெயை மக்கள் அடிக்கடி பயன்படுத்துகிறார்கள், ஆனால் கிராம்பு வலியை நீக்குவது மட்டுமல்லாமல், பற்களின் மஞ்சள் நிறத்தையும் நீக்குகிறது. கிராம்பு பற்களில் படிந்திருக்கும் அழுக்கு மற்றும் பாக்டீரியாக்களை நீக்குகிறது. கிராம்புகளில் ஆன்டிமைக்ரோபியல் கூறுகள் உள்ளன, அவை பற்களில் மறைந்திருக்கும் பாக்டீரியாவை அழிப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் நீக்குகின்றன. இதற்கு கிராம்பு எண்ணெய் கொண்டு பற்களை சுத்தம் செய்யவும். இது தவிர கிராம்பு பொடியில் எலுமிச்சை சாறு கலந்து துலக்குவதும் பற்களின் மஞ்சள் நிறத்தை நீக்கும்.
பேக்கிங் சோடா:
பற்களை சுத்தமாகவும், பளபளப்பாகவும் மாற்ற பேக்கிங் சோடா ஒரு சிறந்த வழி. இது பற்களை சுத்தப்படுத்துவது மட்டுமின்றி, பாக்டீரியாவை அகற்றவும் உதவுகிறது. இதனுடன், பற்களை சுத்தம் செய்வதன் மூலம் வாயில் இருந்து வரும் துர்நாற்றமும் நீங்கும். அரை டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சில துளிகள் தண்ணீர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலக்கவும். இப்போது பற்பசை போல் பயன்படுத்தவும்.
கற்றாழை ஜெல்:
கற்றாழை ஜெல்லை பற்களில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், பற்கள் வெண்மையாவதோடு, ஈறுகளும் வலிமைப் பெறும்.
வாழைப்பழத்தோல்:
பற்களை சுத்தமாக வைத்திருக்க வாழைத்தோலும் உதவுகிறது. தோலின் வெள்ளைப் பகுதியைப் பற்களில் தினமும் சில நிமிடங்கள் தேய்த்து, பிறகு துலக்க வேண்டும். இந்த தீர்வை வாரத்திற்கு 2-3 முறை செய்து பாருங்கள், உங்கள் பற்களின் மஞ்சள் நிறம் விரைவில் மறைந்துவிடும்.
கடுகு எண்ணெய் மற்றும் உப்பு:
அரை டீஸ்பூன் கடுகு எண்ணெயில் சிறிது உப்பைக் கலந்து, இந்த பேஸ்ட்டை விரலால் பற்கள் மற்றும் ஈறுகளில் லேசாக மசாஜ் செய்யவும். நீங்கள் அதை தினமும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பற்களின் மஞ்சள் நிறம் நீங்குவதுடன் பையோரியா பிரச்சனையும் நீங்கும்.
ஆப்பிள் சீடர் வினிகர்:
ஆப்பிள் சீடர் வினிகர் பற்களின் மஞ்சள் நிறத்தை நீக்குவதோடு, மற்ற பல் பிரச்சனைகளிலிருந்தும் விடுபடுகிறது. இதில் உள்ள அமில கூறுகள் பற்களை வெண்மையாக வைத்திருக்கும். இதற்கு ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்து அதில் சிறிது தண்ணீர் கலந்து பிரஷ் மூலம் பற்களை சுத்தம் செய்யவும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.