Horoscope Today: இந்த ராசிகர்களுக்கு இன்று சவாலான நாள்.!! கேது மாற்றத்தால், மிகுந்த எச்சரிக்கை அவசியம்..!!

Anija Kannan   | Asianet News
Published : Feb 20, 2022, 06:29 AM IST
Horoscope Today: இந்த ராசிகர்களுக்கு இன்று சவாலான நாள்.!! கேது மாற்றத்தால், மிகுந்த எச்சரிக்கை அவசியம்..!!

சுருக்கம்

Horoscope Today: ஜோதிட சாஸ்திரத்தில், ஒருவரின் எதிர்காலத்தை கணிக்க ஜாதகங்கள் முக்கியமாக பயனுள்ளதாக இருக்கும்.அதன்படி,கேதுவின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு அசுபமாக இருக்கும்.

ஜோதிட சாஸ்திரத்தில், ஒருவரின் எதிர்காலத்தை கணிக்க ஜாதகங்கள் முக்கியமாக பயனுள்ளதாக இருக்கும். அதன்படி,கேதுவின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு அசுபமாக இருக்கும்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. கிரகங்களின் நிலை மோசமாக இருக்கும்போது சுப மற்றும் அசுப விளைவுகள் இரண்டும் காணப்படுகின்றன. அதனால் வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகள் நிகழ்கின்றன. 

ஜாதகத்தில் நிழல் கிரகமான கேதுவின் மோசமான நிலை காரணமாக வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படும். கேது ஏப்ரல் 12, 2022 அன்று துலா ராசிக்குள் நுழைகிறார். கேதுவின் இந்த மாற்றத்தால்  கீழே குறிப்பிட்டுள்ள ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல வித பாதிப்புகள் ஏற்படும். கேதுவின் சஞ்சாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அசுபமாக இருக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

மேஷம்:

கேதுவின் ராசி மாற்றம் மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சிக்கலை உருவாக்கும். இந்த நேரத்தில் நீங்கள் தோல் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கூட்டுத் தொழிலில் பங்குதாரருடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். இதனால் வியாபாரத்தில் நிதி நிலை பாதிக்கப்படலாம்.

ரிஷபம்:

கேது சஞ்சாரத்தின் போது மனரீதியான பிரச்சனைகள் வரலாம். மேலும், தோல் தொடர்பான சில பிரச்சனைகள் தொந்தரவு செய்யலாம். ரிஷப ராசிக்காரர்களுக்கு விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது, ஆகையால் எச்சரிக்கையாக இருங்கள். சாலையைக் கடக்கும்போது அல்லது வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருப்பது அவசியம். 

சிம்மம்:

கேது சஞ்சார காலத்தில் மன அமைதி கெடும். குடும்ப உறுப்பினர்களுடன் சில விஷயங்களில் சண்டைகள் வரலாம். இந்த நேரத்தில், எந்தவொரு நிதி முதலீட்டையும் தவிர்க்கவும், இல்லையெனில் இழப்பு  
எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் அலைச்சல்களும், பொறுப்புகளும் அதிகரிக்கும்.

துலாம்:

கேது சஞ்சாரத்தின் போது நீங்கள் அதிக மன சோர்வை உணரலாம். குடும்ப விஷயங்களில் கவலை இருக்கலாம். இந்த காலத்தில் புதிதாக எதையும் செய்வது நல்ல பலனைத் தராது. துலா ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் பொருளாதார முன்னேற்றத்தில் தடைகள் ஏற்படும்.

விருச்சிகம்:

கடினமாக உழைத்தாலும், கேது பெயர்ச்சி காலத்தில் வெற்றி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இந்த நேரம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்காது. மாணவர்கள் பாடத்தை புரிந்து கொள்ள சிரமப்படுவார்கள். குடும்பத்தில் தகராறு ஏற்படலாம். கேது சஞ்சார காலத்தில், நண்பர்களுக்கிடையே தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. 

தனுசு:

தனுசு ராசிக்காரர்கள் கேது சஞ்சாரத்தின் போது தேவையில்லாமல் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கும். இதனால் வீண் செலவுகள் அதிகரிக்கும். தினசரி வருமானம் பாதிக்கப்படலாம். வியாபாரத்தில் பணம் சிக்கிக்கொள்ளலாம். ஆகையால் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மீனம்:

நீங்கள் செய்யும் வேலை மற்றும் தொழிலில் வெற்றி எளிதில் கிடைக்காது. உங்களை நிரூபிக்க கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். கேது பெயர்ச்சி காலத்தில் தோல் நோய்களின் தொல்லை வரக்கூடும். 

கடகம்: 

கேது சஞ்சார காலத்தில், கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். இழுபறியாக இருந்து வந்த தனவரவுகள் கிடைக்கும். தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். மாற்றமான சிந்தனைகளின் மூலம் புதுவிதமான அனுபவங்களும், சூழ்நிலைகளும் உண்டாகும்.

மகரம்: 

கேது சஞ்சார காலத்தில், பயணங்கள் தொடர்பான விஷயங்களில் நிதானம் வேண்டும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆசைகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த சாதகமற்ற சூழல்கள் படிப்படியாக குறையும்.  நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்