Fertility problems: குழந்தையின்மை பிரச்சனைகளின் அறிகுறிகள்! தீர்வுகள் என்ன? ஆண்களுக்கும் பெண்களுக்குமானது!

Anija Kannan   | Asianet News
Published : Feb 19, 2022, 12:58 PM ISTUpdated : Feb 19, 2022, 12:59 PM IST
Fertility problems: குழந்தையின்மை பிரச்சனைகளின் அறிகுறிகள்! தீர்வுகள் என்ன? ஆண்களுக்கும் பெண்களுக்குமானது!

சுருக்கம்

ஆண்களாக இருந்தாலும் சரி,பெண்களாக இருந்தாலும் சரி,கருவுறுதல் பிரச்சினைக்கான அறிகுறிகளை தெரிந்துக் கொண்டால் அதற்கு உடனடி தீர்வு காணலாம்.

ஆண்களாக இருந்தாலும் சரி,பெண்களாக இருந்தாலும் சரி,கருவுறுதல் பிரச்சினைக்கான அறிகுறிகளை தெரிந்துக் கொண்டால் அதற்கு உடனடி தீர்வு காணலாம்.

இன்றைய மேற்கத்திய கலாசாரத்தில், திருமணமாகி ஓரிரு ஆண்டுகளுக்கு குழந்தை பற்றிப் பெரும்பாலான தம்பதியினர் சிந்திப்பதே இல்லை. அதன் பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள முயலும்போது, முறையில்லாத உணவு பழக்கங்களால் சிக்கல் ஏற்படுகிறது. இதன் காரணமாக, கருவுறுதல் இயற்கை முறையில் நிகழாததால், செயற்கை கருத்தரிப்பு முறையினை நோக்கி பெரும்பாலான தம்பதியினர் செல்கின்றனர்.

இதனைத் தவிர்த்து, நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான சில பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் இயற்கை முறையில் கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யலாம். வளரும் நாடுகளில் நான்கு தம்பதிகளில் ஒருவர் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் கூறுகிறது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் 48 மில்லியன் தம்பதிகள் மற்றும் 186 மில்லியன் நபர்களுக்கு கருவுறாமை பிரச்சனை இருக்கிறது.

கருவுறாமை பற்றி தெரிந்து கொள்வோம்? 

கருவுறாமை என்பது ஆறு முதல் பன்னிரெண்டு மாதங்கள் பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகும் கருத்தரிக்க முடியாமல் இருப்பதைக் குறிக்கிறது.

மருத்துவ வரலாறு, வயது அல்லது உடல்நலக் கோளாறுகள், ஏற்கனவே நோய் இருப்பவர்களைத் தவிர, வேறு அனைவரும் 12 மாத உடலுறாவுக்குப் பிறகும் கருவுறாமல் இருந்தால் அதற்கு மருத்துவரை அணுகலாம்.

கருவுறாமை பிரச்சனைக்கும் அறிகுறிகள் உண்டு என்பது பொதுவாக அனைவருக்கும் தெரிவதில்லை.  

இதில் தம்பதிகளில் பாதிக்கும் அதிகமானவர்கள் மருத்துவ உதவியுடனோ அல்லது மருத்துவ சிகிச்சைகள் இல்லாமலேயே கருத்தரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தையின்மை பிரச்சனைகளுக்கு பெண்கள் மட்டுமே காரணம் என்ற தவறான கருத்து தற்போது மாறிவருகிறது.

கருத்தரித்தலுக்கு பல காரணிகள் உள்ளன. ஆணுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தி இருப்பதும், பெண்ணுக்கு ஆரோக்கியமான கரு முட்டைகள் இருப்பதும் கருவுறுதலின் அடிப்படை காரணிகள் என்றால், இதைத்தவிர வேறு பல காரணங்களும் உள்ளன.

விந்தணுவின் கருத்தரிக்கும் திறன், கருவின் தரம் மற்றும் பெண்ணின் கருப்பையில் பொருத்துவதற்கான திறன் என பல காரணங்களால் கருவுறுதல் தள்ளிப்போகலாம்.

சரியான நேரத்தில் தேவையான சிகிச்சையைப் பெற ஆண்கள் மற்றும் பெண்கள் கருவுறாமைக்கான பல அறிகுறிகளையும் காரணங்களையும் அறிந்து கொள்வது அவசியம்.

1. ஆண்களுக்கு கருவுறுதல் பிரச்சினைகள் இருப்பதற்கான அறிகுறிகள்:

ஒவ்வொரு நபருக்கு கருவுறாமைக்கான அறிகுறிகள் மாறுபடும் என்றாலும் இவை பொதுவானவை.

டெஸ்டிகுலர் வலி மற்றும் வீக்கம், சிறிய உறுதியான விரைகள், விந்து வெளியேறுவதில் சிக்கல்கள், விறைப்புத்தன்மையை பராமரிக்க இயலாமை மற்றும் பாலியல் ஆசைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் போன்றவை.

2. பெண்களுக்கு கருவுறுதல் பிரச்சினைகள் இருப்பதற்கான பொதுவான அறிகுறிகள்:   

ஒழுங்கற்ற மற்றும் அசாதாரணமான மாதவிடாய், மாதவிடாய் காலத்தில் அதிகமான அல்லது குறைவான ரத்தப் போக்கு போன்றவை.

ஹார்மோன் மாற்றங்கள்: முகப்பரு போன்ற தோல் மாற்றங்கள், உதடுகள், மார்பு மற்றும் கன்னம் ஆகியவற்றில் முடி வளர்ச்சி. உடல் பருமன் போன்றவை.

பாலியல் விருப்பத்தில் ஏற்படும் மாற்றங்கள்:

மார்பின்  முலைக்காம்புகளிலிருந்து திரவம் சுரப்பது  

எண்டோமெட்ரியோசிஸின் அறிகுறியாக இருக்கலாம். 

மாதக்கணக்கில் மாதவிடாய் வராமல் இருப்பது.

இவை அனைத்தும் ஆண்கள் மற்றும் பெண்களின் கருவுறாமைக்கான முக்கியமான அறிகுறிகள் ஆகும்.


 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Bananas For Constipation : மோசமான மலச்சிக்கல் கூட இந்த 1 பொருளை 'வாழைப்பழத்துடன்' சேர்த்து சாப்பிட்டால் தீரும்!!
Foods for Hair Loss : இந்த '5' உணவுகள் முடி கொட்டுறத அதிகரிக்கும் இனிமேல் குறைச்சுக்கோங்க