ஆண்களை மட்டும் குறிவைக்கும் நோய்கள்..! அபாய அறிகுறியா..? இனி இந்த அறிகுறிகளில் அலட்சியம் வேண்டாம்..!!

Anija Kannan   | Asianet News
Published : Feb 19, 2022, 10:33 AM ISTUpdated : Feb 19, 2022, 10:34 AM IST
ஆண்களை மட்டும் குறிவைக்கும் நோய்கள்..! அபாய அறிகுறியா..? இனி இந்த அறிகுறிகளில் அலட்சியம் வேண்டாம்..!!

சுருக்கம்

ஆண்களின் உணவில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் தாதுக்கள் குறைந்தால், விறைப்புத்தன்மை மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்கள் வர வாய்ப்புள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆண்கள் பெண்களை விட பலமானவர்கள்,என்று தானே நினைக்கிறீர்கள். ஆனால், உண்மையில் ஆண்கள் மனதளவில் பெண்களை விட மிகவும் மென்மையானவர்கள்.குறிப்பாக ஆண்களுக்கு மன அழுத்தம் மற்றும் கவலை அதிகமாக இருக்கும். எனவே, அவர்கள் ஆரோக்கியமாக இருக்க வலுவான உணவு தேவை. எனவே, உணவு விஷயத்தில் கவனம் செலுத்தாவிட்டால் பல உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

ஒவ்வொருவரின் ஆரோக்கிய தேவையும் வித்தியாசமானது.பெண்களை விட ஆண்களுக்கும் சில குறிப்பிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவை. இந்த வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு பல நோய்களிலிருந்து பாதுகாப்பையும் அளிக்கின்றன. ஆண்களுக்கு அத்தியாவசியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் என்ன, அவற்றின் பற்றாக்குறையால் அவர்களுக்கு என்ன நோய் வரலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஆண்களின் ஆரோக்கியம்: 

ஆண்களுக்கு ஆரோக்கியமாக இருக்க ஊட்டச்சத்து  அவசியம். அப்போதுதான் அவர்கள் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருப்பார்கள். உடலில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள் மற்றும் தாதுக்கள் குறைவாக இருந்தால், அது எந்த வேலையும் செய்ய முடியாது. 

விறைப்புத்தன்மை: 

இந்த சிக்கல் வயதான ஆண்கள், நடுத்தர வயது மற்றும் தற்போதைய இளைய தலைமுறையினர் சந்திக்கும் மிகவும் பொதுவான பாலியல் கோளாறாக இருக்கிறது. இதற்கு சிகிச்சை இருக்கும் போது அதனை பயன்படுத்தி கொள்ள ஆண்கள் முன்வருவதில்லை. இது ஆபத்தான நோயல்ல என்றாலும். ஆண்களை கவலையடையச் செய்கிறது. இந்த பிரச்சனையால் அவர்கள் மனதளவில் மிகவும் பாதிப்படைகின்றனர்.  இதனால் பல ஆண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

வைட்டமின் டி:

வைட்டமின் டி எலும்புகளை வலுப்படுத்தவும், இரத்தக் குழாய்களின் வீக்கத்தைக் குறைக்கவும் மிகவும் அவசியம். ஆனால் ஆண்கள் மட்டுமல்ல பெரும்பாலான  பெரும்பாலான பெண்களுக்கு இது கிடைப்பதில்லை. ஏனெனில், நமது வாழ்க்கை முறை காரணமாக, விட்டமின் டி சத்தின் ஆதாரமான சூரிய ஒளியை நாம் பெற முடியவில்லை. எனவே, வைட்டமின் டி பெற ஆண்கள் சால்மன், மீன், முட்டை, பால் பொருட்கள் மற்றும் காளான்கள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.

இதய பிரச்சனைகள்:   

பெண்களை விட ஆண்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். உலக அளவில் பெண்களை விட ஆண்களே மாரடைப்பால் இறப்பவர்கள் அதிகம் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்களின் கொலஸ்ட்ரால் அளவு அபரிமிதமாக அதிகரித்து விட்டதால்,இதய நோய் வருகிறது. இந்தப் பிரச்னையைத் தவிர்க்க ஆண்கள் அவ்வப்போது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். 

நுரையீரல் புற்றுநோய்:  

இந்த நுரையீரல் புற்றுநோய் பெரும்பாலும் புகைபிடிப்பதால் ஏற்படுகிறது. அவர்களில், புகைபிடித்தல் பெண்களை விட ஆண்களுக்கு மிகவும் பொதுவானது. 90 சதவீத நுரையீரல் புற்றுநோய்கள் புகைபிடிப்பதால் மட்டுமே ஏற்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே தொற்று ஏற்படாமல் இருக்க உடனடியாக புகைபிடிப்பதை தவிர்க்கவும். 

டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் அதிகரிப்பு: 

டெஸ்டோஸ்டிரோன் ஒரு ஸ்டீராய்டு ஹார்மோன் ஆகும், இது ஆண்களின் விந்தணுக்களிலும் மற்றும் பெண்களின் கருப்பையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும், வயதாகும் போதும் மற்றும் முதுமையின் போது இது குறிப்பிட்ட அளவு இருக்கவேண்டியது முக்கியம். இந்த ஹார்மோன் குறைந்தால் பாலியல் பிரச்சனைகள் வரலாம். இது ஆண்களின் விந்தணு எண்ணிக்கை முற்றிலும் குறைகிறது. 

பெரியவர்களில், ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு, உடல் அமைப்பு, பாலியல் செயல்பாடு மற்றும் பல உடல் நல செயல்பாடுகளுக்கு இது மிகவும் முக்கியமானது.

 இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியம். எனவே, ஆண்கள் மேலே குறிப்பிட்டுள்ள நோய்களின் ஆரம்ப அறிகுறிகளை சரியான நேரத்தில் கவனித்து சிகிச்சை பெற்றால் நோயின் தீவிரத்தை பெரிய அளவில் தவிர்க்கலாம்.  ஆனால் எது அபாய அறிகுறி, எதை உடனடியாக மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதில் நமக்கு குழப்பம் இருக்கலாம்.


 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்