
சர்க்கரைவள்ளி கிழங்கில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. இதனை நீங்கல் உண்டு வந்தால் உங்கள் உடலிற்கு பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
1. அதிக கலோரிகள், வாயு கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கிழங்கு வகைகள் ஏற்படுத்தும் என்ற காரணங்களால் கிழங்கு வகைகளை அதிகம் சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், கிழங்கு வகைகளில் ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன. அவற்றில், சக்கரைவள்ளிக்கிழங்கு சத்து நிறைந்த கிழங்கு வகையாகும்.
2. பொதுவாக கிழங்கில் கொழுப்பு அதிகம் நிறைந்து காணப்படும். ஆனால் சர்க்கரைவள்ளி கிழங்கில் கொழுப்பு மிகவும் குறைவு. மேலும் இதில் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது. இவை உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கின்றது. மேலும் இரத்த சர்க்கரை அளவும் சீராக வைக்க உதவுகின்றது.
3. உடலுக்கு தேவையான அன்றாட ஊட்டச்சத்துக்களில் பெரும்பாலானவை சக்கரைவள்ளிக்கிழங்கில் உள்ளன. நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவது முதல் PCOS, செரிமானக் கோளாறுகளை சரி செய்வது வரை சர்க்கரைவள்ளிக்கிழங்கில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன.
4. மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க முக்கியமாக நார்சத்து தேவைப்படும். சர்க்கரைவள்ளி கிழங்கில் தேவையான அளவில் நார்சத்து நிறைந்துள்ளதால் குடலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும். மேலும் மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.
4. கீரை வகைகளில் இருப்பதுபோல சர்க்கரைவள்ளிக்கிழங்கிலும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் மற்றும் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
5. சர்க்கரைவள்ளி கிழங்கினை தினமும் உண்டு வந்தால் கரு வளர்ச்சிக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும். ஏனெனில் இதில் அதிக அளவில் போலெட்ஸ் நிறைந்துள்ளது.
6. நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு அல்லது தீவிரமான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உடனடியாக ஆற்றல் தேவைப்படும்போது சர்க்கரை வள்ளிக்கிழங்கு இன்ஸ்டன்ட் ஆற்றல் தரும். தினமும் ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான தின்பண்டமாக சாப்பிட்டு வரலாம்.
7. மற்ற கிழங்கு வகைகளை விட இதில் அதிகளவு பீட்டா கரோட்டின் உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்திக்கு உதவிடும். இவை சரும ஆரோக்கியம், தோல் மற்றும் நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு பெரிதும் உதவிடும்.
8. சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை அடிக்கடி உண்டு வந்தால் உங்களை எப்போதும் இளமையுடன் வைத்திருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.