Black spot: முகத்தை வெளியே காட்ட சங்கடமா..? கரும்புள்ளிகளை நீக்க...இதைவிட சூப்பர் டிப்ஸ் கிடைக்காது...

By Anu KanFirst Published Feb 20, 2022, 8:34 AM IST
Highlights

ஒருமுறை இந்த கரும்புள்ளிகள் முகத்தில் தோன்றி விட்டால் நம் முக அழகை முற்றிலும் பாதிக்கும். சரி வாங்க ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை எவ்வாறு அகற்றலாம் என்பதை பார்க்கலாம்.

முகத்தின் அழகை கெடுப்பது ஆங்காங்கே, மறைந்துள்ள கரும்புள்ளிகள். சூரிய ஒளி அதிகம் படுவதாலும்,  நம் உடலில் ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டாலும், சிகிச்சையின்போது பல மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலமாகவும், சரியான தூக்கம் இல்லாமலும், மன அழுத்தம் கொண்டிருந்தாலும் கண்டிப்பாக முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவது வழக்கமான ஒன்று.

ஒருமுறை இந்த கரும்புள்ளிகள் முகத்தில் தோன்றி விட்டால் நம் முக அழகை முற்றிலும் பாதிக்கும். சரி வாங்க ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை எவ்வாறு அகற்றலாம் என்பதை பார்க்கலாம்.

Latest Videos

உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி அதனை முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

பப்பாளி, எலுமிச்சை தேன்  காமினேஷன்:

கொஞ்சம் பப்பாளி சாறு, கொஞ்சம் எலுமிச்சை சாறு, தேன்  கொஞ்சம் இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து, நம் முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் அப்படியே விடவும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரை கொண்டு முகத்தை கழுவலாம். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தாலே போதும் முகம் பளபளப்பாக காணப்படும்.

கொத்தமல்லி:

 

கொத்தமல்லி இலையுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவி விட வேண்டும். இதனால் கரும்புள்ளிகள் விரைவாக மறைந்துவிடும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்ய வேண்டும்.

ஓட்ஸ்:

ஓட்ஸ் முகத்திற்கு மிகவும் சிறந்த ஒரு பொருளாகும். ஓட்ஸை தூள் செய்து அதனுடன் ரோஸ் வாட்டரை கலந்து, முகத்திற்கு அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவ வேண்டும்.

தயிர்:

தயிர் மற்றும் எலுமிச்சை இரண்டுமே சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்ததாகும். இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் கலந்து முகத்திற்கு அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

தக்காளி:

தக்காளியை பேஸ்ட் செய்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவிக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைவதோடு, முகம் பளிச்சென மாறும்.

பேக்கிங் சோடா:

பேக்கிங் சோடாவை நீர் விட்டு பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இவ்வாறு வாரத்தில் மூன்று நாட்கள் செய்து வருவதால் உங்களது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

கற்றாழை:

கற்றாழை ஜெல்லை கொண்டு முகத்தை தினமும் 15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் முகத்தில் எந்த ஒரு மாசு மருக்களும் இல்லாமல் முகம் மென்மையாகவும் அழகாகவும் இருக்கும்.

வாழைப்பழம்:

வாழைப்பழத்தை நன்றாக மசித்து, அதில் பால் சேர்த்து முகத்திற்கு அப்ளை செய்ய வேண்டும். இது போன்று தினமும் இரண்டு தடவைகள் செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறும். இரண்டு வாரங்களில் முகத்தில் பொலிவு கூடியிருப்பதை நீங்கள் கண்கூடாக காணலாம்.

தேங்காய் தண்ணீர்:

தேங்காய் தண்ணீரை கொண்டு தினமும் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதினால் முகம் பளபளப்பாக மாறும். முகத்தின் நிறம் கூடும்.

பால்:

பாலை கொண்டு தினமும் காலையில் முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை, அழுக்கள் நீங்கி முகம் பளபளப்பாக மாறும். முகத்தின் வசீகரம் கூடும். இளமையான தோற்றம் கிடைக்கும்.


 

click me!