டிஜிட்டல் சமூகத்தின் புதிய ஆபத்து... நீண்ட நேரம் டைப் செய்வதால் ஏற்படும் உடல் உபாதைகள்!

By manimegalai aFirst Published Jan 18, 2022, 11:25 AM IST
Highlights

கம்ப்யூட்டர் அல்லது  செல்போனின் தொடர்ச்சியாக டைப் செய்வதன் விளைவாக நம் கை, தோள்பட்டை மற்றும் முதுகில் வலி ஏற்படலாம்.

இன்றைய நவீன உலகில் கம்ப்யூட்டர், செல்போன் உபயோகிக்காத மனிதர்கள் குறைவு, அந்த அளவுக்கு உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி மேலோங்கி உள்ளது. மொத்தத்தில் இன்றைய உலகில் இன்டர்நெட்,  மனிதர்களின் உயிர் நாடியாக இருந்து வருகிறது.'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழி நீண்ட நேரம் கம்ப்யூட்டர், செல்போன் பயன்படுத்துவோருக்கும் பொருந்தும். கரோனா தொற்றுநோயின் கடும் பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டன.  எனவே, வேலைக்கும், பல நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கும் அவ்வப்போது இன்டர்நெட்  பயன்படுத்திக்கொள்வதில் தவறே இல்லை. ஆனால், கால வரைமுறை இல்லாமல் தேவைற்ற செயல்களில் இன்டர்நெட், செல்போன் அதிகப்படியாக பயன்படுத்துவது பல்வேறு உடல் பிரச்சினைகளை உங்களுக்கு ஏற்படுத்துகிறது.  

அதிகப்படியான செல்போன், இன்டர்நெட்  பயன்பாட்டினால் ஏற்படும் பிற உடல் உபாதைகள்:

நீண்ட நேரமாகவும் செல்போன், இன்டர்நெட் மூலம், மெசேஜ் டைப் செய்பவர்களுக்கு கை விரல்களில் உள்ள தசை நார்களில் பாதிப்புகள் ஏற்படும். ஒரே செயலை தொடர்ந்து செய்யும்போதும், ஹோல்டு செய்யும்போதும் கை விரல் தசைகளில், ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். மேலும், தசை நார்கள் கிழிந்துபோகும். இதனால், சில சமயங்களில் விரல்களை அசைக்க முடியாத நிலையும் கூட ஏற்படலாம்.

அதிக நேரம் செல்போன் பேசும் போது, அதிலிருந்து வெளிவரும் ரேடியேஷன், அதிகச்சூட்டை உண்டாக்கும். அது, நம்முடைய மூளை, காது, இதயம் போன்றவற்றை பாதிக்கும். அதுமட்டுமின்று, ஒருவித மன அழுத்தமும் உண்டாகும். அதேபோன்று, நீண்ட நேரம் இன்டர்நெட் பயன்பாடு கண் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

அதேபோன்று, அதிகப்படியான நேரம் டைப் செய்வது கார்பல் டன்னல் (Carpal Tunnel) நோய்க்குறியின் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும். இது கட்டைவிரல், ஆள்காட்டி விரல், நடுத்தர மற்றும் மோதிர விரலின் பாதியில் வலி, கூச்ச உணர்வு, எரியும் உணர்வு மற்றும் உணர்வின்மை ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

 பிரச்சனை வராமல் தடுப்பது அவசியம்!

பல நேரங்களில் நாம், கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் எத்தனை மணி நேரம் செலவு செய்கிறோம் என்பதை சற்றும் கவனிக்காத அளவுக்கு வேலையில் மூழ்கிவிடுகிறோம். எனவே, உங்கள் விரல்களை ஸ்ட்ரெட்ச் செய்ய, அதாவது நீட்டி மடக்கி சுடக்குகள் எடுத்துக்கொள்ள மறக்க வேண்டாம். மேலும் ஒரு நாள் முழுவதும் வேலை செய்பவர்கள் அவ்வப்போது தங்களது கை முட்டியை நீட்டி மடக்குவதன் மூலம் விரல்களில் ஏற்படும் வலியைப் போக்கலாம்.

எங்கெல்லாம் அமர முடியுமோ அங்கெல்லாம் அமர்ந்து வேலை செய்யும் பழக்கத்தால் நம் உடல் மட்டுமல்ல, விரல்களும் பாதிக்கப்படுகின்றன. எனவே, கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் டைப் செய்வதில் சிரமம் இல்லாத இடங்களில் அவைகளை வைத்து வேலை செய்வது நல்லது. இதற்கு, ஒரு மேஜை மற்றும் ஒரு நாற்காலி, ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

நீங்கள் நீண்ட நேரம் தொடர்ச்சியாக செல்போன் டைப் செய்ய வேண்டாம். அதேபோன்று, செல்போனில் டைப் செய்யும் போது, கை வலியைத் தவிர்க்க உங்கள் செல்போனினை இரு கைகளிலும் பிடித்து, உங்கள் மணிகட்டை நேராக வைத்து பயன்படுத்த முயற்சிப்பது நல்லது.

செல்போன் பயன்படுத்தும் போது, மெசேஜ் செய்வதனை காட்டிலும், வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது உங்கள் கட்டைவிரலில் உள்ள அழுத்தத்தை குறைக்க உதவும். மேலும், செல்போனை ஸ்பீக்கரில் போட்டுப் பேசும்போதும், ஹெட்செட் போட்டு பேசும்போதும் ஏற்படும் பாதிப்பு, காதுக்கு அருகில் செல்போனை வைத்துப் பேசும் பாதிப்பைவிடவும் குறைவு. எனவே, செல்போனில் பேசும்போது ஹெட்செட், ஸ்பீக்கர் போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.

குறிப்பாக, இன்டர்நெட்  நீங்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறீர்கள் என்பது பற்றி தெரிந்து கொள்வதற்கு முக்கியமான செயலிகள் (App) வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், நீங்கள் ஒரு நாளில் எவ்வளவு நேரம் இன்டர்நெட் பயன்படுத்துகிறீர்கள் என்பதனை எளிதாக அளவிட முடியும்.  இந்த செயலியை பயன்படுத்தி உங்களது இன்டர்நெட் பயன்பாட்டின் அளவை குறைக்க முயற்சிக்க வேண்டும்.   

click me!