குளிர்காலத்தில் முடி அதிகமாக கொட்டுதா? இனி கவலை வேண்டாம்! இதை ட்ரை பண்ணினால் போதும்!

By manimegalai aFirst Published Jan 18, 2022, 10:26 AM IST
Highlights

உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும், நறுமணமாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். 

பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகிய இருபாலருக்கும் தனது அழகை மெருகேற்றிக் காட்டுவதே அவர்களின் தலைமுடிதான். ஆனால், தற்போது மன அழுத்தம், தண்ணீர் மாறுதல், மாசு உள்ளிட்ட காரணங்களால் முடி அதிகமாக கொட்டி விடுகிறது. அதிலும், பல ஆண்களுக்கு 30 வயதை எட்டுவதற்கும் சொட்டை விழுகிறது. சில சமயங்களில் ஆண்களுக்கு திருணம் தள்ளி போவதற்கு கூட முடி ஒரு காரணமாக அமைகிறது. 

 

குறிப்பாக, குளிர்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால், சருமத்தை போலவே ஸ்கேல்ப்பும் வறண்டுவிடும். இதனால் கூந்தல் சொரசொரப்பாக எளிதில் உதிரும் தன்மையை பெற்றுவிடும். எனவே, உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும், நறுமணமாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். இதற்கு தேவையான எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 கற்றாழை மற்றும் வெந்தயம்: 

கற்றாழை மற்றும் வெந்தயத்தை ஒன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்து தலையில் தேய்த்துக் கொள்ளலாம். 30 நிமிடங்களுக்கு பிறகு தலைக்கு குளிக்க வேண்டும். கற்றாழையில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இதில் உள்ள வைட்டமின் மற்றும் தாதுக்கள் முடி வளர்ச்சிக்கு உதவும். உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தவும் இந்த முறை உதவும். பொடுகு தொல்லைகளில் இருந்தும் எளிதில் நீங்கள் விடுபடலாம்.

நெல்லி மற்றும் கற்றாழை:

முதலில் 2 டீஸ்பூன் நெல்லித் தூள், 2 டீஸ்பூன் சிகைக்காய் தூள் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும். அதனை உச்சந்தலையில் தடவி 60 நிமிடங்களுக்கு பிறகு குளிக்க வேண்டும். முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தி, முடி உதிர்வை குறைக்க இது உதவும்.  

தேங்காய் பால் மற்றும் வெங்காயச் சாறு:

முதலில் நல்ல தேங்காய் துண்டுகளை அரைத்து அதில் இருந்து பால் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை தலை முடி வேர்களில் படும்படி நன்றாக தேய்த்து மசாஜ் செய்து 2 மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இதில் உள்ள இரும்பு, பொட்டாசியம் மற்றும் அத்தியாவசிய சில கொழுப்பு சத்துக்கள் இயற்கையான முடி வளர்ச்சிக்கு பயனளிக்கும்.

முட்டை மற்றும் வெந்தயம்: 

முட்டை முடி வளர்ச்சிக்கு நீண்ட காலமாக பின்பற்றப்படும் முறை என்றே சொல்லலாம். முதலில் முட்டையின் வெள்ளைக் கருவை பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஆலிவ் ஆயிலை கலந்தும் முடியில் தேய்த்துக் கொள்ளலாம். முடியின் வேர்க்கால்களில் படும்படி தேய்க்க வேண்டியது முக்கியம். அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்கலாம். முட்டையில் அதிக அளவில் புரதங்கள் காணப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல் கந்தகம், துத்தநாகம், இரும்பு, அயோடின் சத்துக்களும் உள்ளன. இது உங்களது முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

உங்கள்  கூந்தல் பராமரிப்பின் போது நீங்கள் செய்யக்கூடிய சில தவறுகள் என்ன என்பதை அறிந்து அதை சரி செய்துகொள்ளுங்கள்.  

பொதுவாகவே பெண்கள் முதல் ஆண்கள் வரை குளிர்காலத்தில் அவசர அவசரமாக தலைக்குக் குளித்து, அதைக் காயவைத்து ஹேர் ஸ்டைல் செய்து கொண்டு கிளம்புவார்கள். ஆனால் நீங்கள் உங்கள் கூந்தலை பராமரிக்கும் போது, நடக்கும் சில தவறுகள் உங்கள் கூந்தலின் வேர்களை சேதப்படுத்தும் என்பதை  தெரிந்து வைத்து கொள்வது அவசியம்.

ஒரு சில ஷாம்பூகளை உங்கள் உச்சந்தலையில் நேரடியாகப் பயன்படுத்தும்போது, அது உங்கள் தலைமுடியை பெரிதும் சேதப்படுத்தும். ஏனெனில் சில ஷாம்பூ வகைகள் தடிமனாக இருக்கும். அதனை நேரடியாகப் பயன்படுத்தினால், உங்கள் உச்சந்தலையில் சேதத்தை விளைவிக்கும். எனவே, ஒரு கப்பில் சிறுதளவு நீர் எடுத்து  ஷாம்பூ கலந்து பயன்படுத்துவது சிறந்தது. அதேபோன்று, முடி ஈரமாக இருக்கும் போது சீப்பு கொண்டு சீவுவது அதிகப்படியான மற்றும் கட்டாய முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.  

click me!