Milk for Weight Loss: பால் குடிப்பது உடல் எடைக்கு பெஸ்டா..? ஒஸ்ட்டா..? மிஸ் பண்ணாம தெரிந்து வைத்து கொள்ளுங்கள்

By Anu KanFirst Published Aug 26, 2022, 7:07 AM IST
Highlights

Milk for Weight Loss: உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அள்ளி தரும், பால் குடிப்பது உடல் எடையை கூட்டுமா..? குறைக்குமா..? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்...

உலகம் முழுவதும் சத்தான ஆகாரங்களில் ஒன்றாக பால் எப்போதும்  இருக்கிறது.பால் குடிப்பதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை  உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன. உடலுக்குத் அத்தியாவசியத் தேவையான கால்சியம் சத்து பால் மற்றும் பால் பொருட்களில் அதிகம் இருக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் பாலில் உள்ளன.

இருப்பினும், உடல் எடையை குறைக்க அல்லது டயட்டிங் செய்ய விரும்புபவர்கள், முதலில் தங்கள் உணவில் இருந்து பாலை முதலில் நீக்கி விடுகிறார்கள். இதனால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. ஆனால், உண்மையில் பால் அருந்துவதன் மூலமும் உடல் பருமனை குறைக்கலாம் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

பால் பொருட்கள் உடல் எடையை குறைக்க உதவுவதாக பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இருப்பினும், குறைந்த கொழுப்புள்ள பால் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். பால் பொருட்களில் கான்ஜுகேட்டட் லினோலிக் அமிலம் (சிஎல்ஏ) உள்ளது. இது உடல் பருமனை தடுக்கிறது. இதனால் உடல் பருமன் குறைகிறது.

 மேலும் படிக்க...Guru Peyarchi 2022: குருவின் வக்ர பெயர்ச்சி..இன்னும் 90 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு திடீர் பண வரவு உண்டாகும்!

பாலில் நல்ல தரமான புரதம்,  மாவுச்சத்து, மக்னீசியம் போன்ற பலவிதமான சத்துக்கள் உள்ளன. 1 கப் பாலில் சுமார் 8.14 கிராம் புரதம் உள்ளது. எனவே, நீங்கள் புரோட்டீன் நிறைத்த பால் உட்கொள்வதன் மூலம், நீண்ட நேரம் பசி இருக்காது. மேலும் ஹார்மோன்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும், பால் உடலில் கொழுப்பு சேர்வதையும் தடுக்கிறது.

பாலில் வைட்டமின் பி12 உள்ளது. இந்த வைட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. மேலும், பாலில் குறைந்த கலோரிகள் இருப்பதால், எடையை குறைக்க எண்ணும் போது அதை உட்கொள்ளலாம். ஆனால், பாலில் செய்யப்பட்ட பொருட்களில் அதிக கொழுப்பு நிறைந்த  பொருட்களை சாப்பிட வேண்டாம்.

உங்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க பால் உதவுகிறது. இது எடையைக் கட்டுப்படுத்தவும் உதவும். பால் புரதம் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது என்று பல ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இது உடல் எடையை குறைக்க உதவும்.

 மேலும் படிக்க...Guru Peyarchi 2022: குருவின் வக்ர பெயர்ச்சி..இன்னும் 90 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு திடீர் பண வரவு உண்டாகும்!

 பாலில் உள்ள வைட்டமின் ஏ, டி, கே, ஈ , வைட்டமின் பி-2 மற்றும் , கால்சியம் உள்ளிட்ட பல தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன.  இந்த கூறுகள் அனைத்தும் உடல் எடையைக் குறைக்க பெறும் பங்கு வகிக்கிறது.

 மேலும் படிக்க...Guru Peyarchi 2022: குருவின் வக்ர பெயர்ச்சி..இன்னும் 90 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு திடீர் பண வரவு உண்டாகும்!

click me!