பலா பழம் பூரணம் கொழுக்கட்டை...! இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு வித்தியாசமா செய்து அசத்துங்கள்!

By manimegalai aFirst Published Aug 23, 2022, 6:49 PM IST
Highlights

பொதுவாக முக்கனிகள் எனப்படும் மா, பலா, வாழை ஆகிய பழங்கள் தெய்வங்களுக்கு உயர்ந்த பழங்கள். இப்படி பட்ட பழங்களை பயன்படுத்தி, கூடுதல் சுவையுடன் கொழுக்கட்டை செய்து, இந்த வருட விநாயகர் சதுர்த்தியை அசத்துங்கள்.
 

பலாப்பழம் பூரண கொழுக்கட்டை:

இந்த டேஸ்டியான... ஹெல்தியான கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்.

அரிசி மாவு - 1 கப் 
உப்பு - ஒரு சிட்டிகை 
நெய் (அ) எண்ணெய்  - 2 டீஸ்பூன்
தண்ணீர் - மாவு பிசைய தேவையான அளவு 

பலாப்பழ பூரணம் செய்ய தேவையான பொருட்கள்:

மேலும் செய்திகள்: இளைஞர்கள் தற்கொலை முடிவு? 'கோப்ரா’ ரசிகர்கள் சந்திப்பு விழாவில் மாணவர்கள் கேள்விக்கு விக்ரம் கொடுத்த பதில்!
 

பலாச்சுளை - 5 (துருவியோ அல்லது குட்டி குட்டியாக வெட்டியோ வைத்து கொள்ளுங்கள்)
தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
வெள்ளம் - அரை கப்
நெய் -  3 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

கொழுக்கட்டை செய்முறை:

தண்ணீரை மிதமாக சூடாக்கி, அதை நீங்கள் வைத்திருக்கும் அரிசி மாவில் கலந்து பிசைந்து கொள்ளுங்கள். இதனுடன் சிறிது உப்பு மற்றும் நெய் கலந்து பிசைந்து கொள்ளுங்கள். மாவில் நெய் அல்லது எண்ணெய் சேர்ப்பதால், கையில் ஒட்டாமல் இருக்கும். மாவில் ருசி கூடும். 

பின்னர் ஒரு கடாயில், நெய் விட்டு, அதில் தேங்காய் துருவல், பலாப்பழம் துருவல் ஆகியவற்றை நன்கு வதக்கவும், இதனுடன் தூள் செய்யப்பட்ட வெல்லம், ஏலக்காய் கலந்து நன்கு சுருளாக திரண்டு வரும் பதத்தில் இறக்கி விடவும். இப்போது கொழுக்கட்டைக்கு தேவையான மாவு மற்றும் பூரணம் இரண்டுமே தயார் ஆகிவிட்டது.

மேலும் செய்திகள்: 'கோப்ரா' ப்ரோமோஷனுக்கு திருச்சி சென்ற விக்ரம் - ஸ்ரீநிதி ஷெட்டி! இணையத்தை கலக்கும் ஏர்போர்ட் போட்டோஸ்!
 

பூரணம் சூடு ஆரியபின்னர், மாவில் ஸ்டப் செய்து அதனை கொழுக்கட்டை அச்சியிலோ அல்லது, கைகளாலேயே கூட கொழுக்கட்டை பிடித்து, இட்லி பாத்திரத்தில் அவித்து, 10 நிமிடம் வேகவைத்து நன்கு வெந்த பின்னர் பிள்ளையாருக்கு படையல் போட்டு விட்டு, உங்கள் குடும்பத்தினருக்கு பரிமாறுங்கள். கண்டிப்பாக, பலாப்பழ சுவையுடன் கூடிய இந்த கொழுக்கட்டையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

click me!