பிபி, சுகர் எல்லாமே இருக்கா? மீனோட முழுச்சத்து கிடைக்க 'இப்படி' சாப்பிடுங்க

Published : Aug 18, 2025, 12:37 PM IST
meen kulambu fish gravy

சுருக்கம்

இந்த பதிவில் மீனில் உள்ள சத்து முழுமையாக கிடைக்க அதை எப்படி சமைத்து சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.

சிக்கன், மட்டனுக்கு அடுத்து அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடுவது மீன் தான். மீனில் புரதம், வைட்டமின்கள், ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை அனைத்தும் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகிறது.

பொதுவாக மீனை குழம்பில் போட்டும், வாணலியில் பொரித்தும், தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு வறுத்தும் சாப்பிடுவோம். சிலர் க்ரில்லிங் அல்லது மைக்ரோ அவனில் சமைப்பதும் உண்டு. இப்படி பல வழிகளில் மீனை சமைத்து சாப்பிட்டாலும் அவற்றில் இருக்கும் முழுமையான சத்து கிடைக்குமா? என்பது கேள்விக்குறி தான். அதுமட்டுமின்றி, மீனை எண்ணெயில் போட்டு பொரித்து அல்லது வறுத்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு கேடு தான் விளைவிக்கும். இத்தகைய சூழ்நிலையில், மீனில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க அதை எப்படி சமைத்து சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மீனை எப்படி சமைத்து சாப்பிடணும்?

மீனில் இருக்கும் முழுமையான சத்துக்களை பெற அதை இட்லி பாத்திரத்தில் வேக வைத்து சாப்பிடுவது தான் சிறந்த வழி என்கின்றனர் நிபுணர்கள். பொதுவாக, சர்க்கரை நோய், உயரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், தைராய்டு, இதய நோய் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் பெரும்பாலும் மீன் சாப்பிடுவதை தவிர்த்து விடுவார்கள். அதுவும் குறிப்பாக எண்ணெயில் வறுத்த, பொரித்த மீனை முற்றிலும் தவிர்த்து விடுவார்கள். அது போல குழம்பும் மீனாக இருந்தாலும் அதில் புளி அதிகம் சேர்க்கப்படுவதால் அதையும் சாப்பிடமாடார்கள். இவர்களுக்காக தான் இந்த வேகவைத்த மீன் என்கின்றனர் நிபுணர்கள்.

இட்லி பானையில் மீனை எப்படி சமைக்கணும்?

முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்து விடுங்கள். பிறகு அதில் மசாலா தடவி சிறிது நேரம் ஊற வைத்துவிடுங்கள். முக்கியமாக அதில் செயற்கை கலர் மற்றும் அதிகாரம் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது வாழை இலையை எடுத்து அதை மூன்று மடங்கு பெரியதாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின் அதிலும் மசாலா தடிவி, மீனை ஒவ்வொன்றாக வைத்து பிறகு இரண்டாக மடிக்கவும். கடைசியாக ஒரு டூத் பிக்கை அதில் சொருகி இட்லி தட்டில் வைத்து வேகவைத்து எடுக்க வேண்டும். மீனை இப்படி சமைத்து சாப்பிட்டால் மீனில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக அப்படியே பெறலாம்.

வேக வைத்த மீன் நன்மைகள் :

- வேகவைத்த மீனில் கொழுப்பு இருக்காது. மேலும் கலோரிகளும் அதிகரிக்காது. முக்கியமாக மீனில் உள்ள கொழுப்புகள் மாறாமல் இருக்கும்.

- குறைந்த வெப்ப நிலையில் மீனை சமைக்கும் போது அதன் ஊட்டச்சத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றன என்கின்றர் நிபுணர்கள். குறிப்பாக தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உருவாவது குறையும்.

- வீணை வேக வைத்தோ அல்லது குழம்பாக சாப்பிடுவது ஆரோக்கியமானது தான் ஏனெனில் குறைந்த வெப்ப நிலையில் மீன் சமைக்கும் போது அதில் கொழுப்பு இருக்காது. முக்கியமாக ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் பாதுகாக்கப்படும்.

மீன் நன்மைகள் :

- மீனில் இருக்கும் ஒமேகா- 3 கொழுப்ப அமிலங்கள் இதயத்திற்கு நன்மை பயக்கும். மேலும் நரம்புகளின் ஆரோக்கியத்திற்கும் நன்மை செய்யும்.

- வைட்டமின் டி- யும் மீனில் உள்ளன.

- மீன் கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மேலும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவும்.

- குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதை தடுக்க மீன் கொடுக்கலாம் என்று ஆய்வு ஒன்று கூறுகின்றது.

குறிப்பு : உங்களது உணவு முறையில் நீங்கள் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யும் முன் முதலில் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Foods for Hair Loss : இந்த '5' உணவுகள் முடி கொட்டுறத அதிகரிக்கும் இனிமேல் குறைச்சுக்கோங்க
Heart Healthy Exercises : ஆயுசுக்கும் இதயம் ஆரோக்கியமாக இருக்க '5' பயிற்சிகள் போதும்! தினமும் செய்ங்க