
மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாலும், குறைந்த சூரிய ஒளியாலும் வீட்டின் சுவர், குளியலறை, மாடித்தரை போன்ற இடங்களில் பாசி படிவது என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும். ஆரம்பத்தில் இதை நாம் யாரும் பெரிதாக கண்டுக்க மாட்டோம். ஆனால் அது படிப்படியாக அதிகரிக்கும் போது அது வீட்டின் அழகை கெடுப்பது மட்டுமல்லாமல், வழுக்கு விழும் அபாயம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளன. எனவே ஆரம்பத்திலேயே இதை கண்டறிந்தால் அவற்றை எளிதாக அடக்கிவிடலாம். சரி இப்போது, கை வலிக்காமல் வீட்டில் படிந்திருக்கும் பாசியை அகற்ற சில வழிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வீட்டில் பாசி படிந்ததை அகற்ற வழிகள் :
1. பேக்கிங் சோடா மற்றும் வினிகர் கலவை
தேவையான பொருட்கள் :
பேக்கிங் சோடா -1 கப்
வினிகர் - 2-3 கப்
ஒரு வாளி தண்ணீர்
ஒரு துரிகை
பயன்படுத்தும் முறை:
பிடிவாதமான பாசி கறையை அகற்ற பேக்கிங் சோடா மற்றும் வினிகர் சிறந்த தேர்வாகும் இதை செய்வதற்கு முன் முதலில் பாசி படிந்திருக்கும் இடத்தின் மேற்பரப்பை ஈரப்படுத்துங்கள். பிறகு ஒரு கப் பேக்கிங் சோடாவை அதன் மேல் தெளித்து சுமார் அரை மணி நேரம் அப்படியே வைத்துவிட்டு பிறகு வினிகரை ஒரு வாளி தண்ணீரில் கலந்து அதை பாசி படர்ந்த இடத்தின் மீது ஊற்றவும். பிறகு ஒரு பிரஷ் கொண்டு நன்கு தைத்தால் பாசி எளிதாக அகற்றி விடும்.
2. ப்ளீச்சிங் பவுடர் மற்றும் சூடான நீர்
ஒரு வாளியில் சமஅளவு சூடான தண்ணீர் மற்றும் பிளீச் கலந்து கொள்ளுங்கள். இதை பாசி படர்ந்த பகுதியில் ஊற்றி பிறகு ஒரு பிரஷ் மூலம் நன்றாக தேய்க்க வேண்டும் இப்படி செய்தால் பாசி சுலபமாக அகற்றி விடும். பாசி முழுவதுமாக அகன்ற பிறகு வெற்று நீரால் அந்த பகுதியை சுத்தம் செய்ய மறக்காதீர்கள்.
3. கான்கிரீட்டில் பாசி படர்ந்திருந்தால் அதை அகற்ற ஒரு வாளி வெதுவெதுப்பான நீர் மட்டும் போதும். இதை செய்ய பாசி படர்ந்த பகுதியில் கொதிக்கும் நீரை ஊற்ற வேண்டும். பிறகு ஒரு கடினமான துரிகை கொண்டு நன்றாக தேய்த்தால் போதும். பாசி அகன்றுவிடும்.
குறிப்பு :
- அதிக ஈரப்பதம் மற்றும் நிழலான பகுதிகளில் பாசி வேகமாகவும் செழிப்பாகவும் வளரும். எனவே அவை வளருவதை தடுக்க வீட்டில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கு வீட்டின் கதவு ஜன்னல்களை திறந்து வையுங்கள். இதனால் கொஞ்சமாவது சூரிய ஒளி வீட்டிற்குள் வரும்.
- அதுமட்டுமின்றி செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது கவனமாக இருங்கள். ஏனெனில் அதிகப்படியான ஈரப்பதம் பாசி வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
- முக்கியமாக, பாசி படர்ந்த பகுதியை சுத்தப்படுத்தும் போது கையுறைகளை அணிய மறக்காதீர்கள். மேலும் கண்களில் படாமல் கவனமாக இருங்கள். சுத்தப்படுத்திய பிறகு கைகளை நன்கு கழுவ வேண்டும். குழந்தைகள் மற்றும் செல்ல பிராணிகளை அந்த இடங்களில் இருந்து விளக்கி வைப்பது நல்லது.
மேலே சொன்ன குறிப்புகளை நீங்கள் பின்பற்றினால் மழைக்காலத்தில் உங்களது வீட்டில் சுவர்களில், மாடியில் பாசி பிடிப்பதை தடுக்கலாம் மற்றும் சுலபமாக அகற்றியும் விடலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.