உடல் எடையை குறைத்து...கொழுப்பை கரைக்கும் அன்னாசி பழம்! சொல்வது யார் தெரியுமா?

By manimegalai aFirst Published Jan 18, 2022, 12:30 PM IST
Highlights

அன்னாசிப் பழம் சுவை நிறைந்த பழங்களுள் ஒன்று. சுவையான உணவாக இருப்பது மட்டுமின்றி, அன்னாசிப் பழத்தில் அதிகளவிலான ஆரோக்கியம் தரும் பொருள்கள் நிரம்பியுள்ளன. 

அன்னாசிப் பழம் சுவை நிறைந்த பழங்களுள் ஒன்று. சுவையான உணவாக இருப்பது மட்டுமின்றி, அன்னாசிப் பழத்தில் அதிகளவிலான ஆரோக்கியம் தரும் பொருள்கள் நிரம்பியுள்ளன. அதனை ஜூஸ், மில்க்‌ஷேக், ஐஸ் க்ரீம், கேக் எனப் பல்வேறு உணவு வகைகளாக உட்கொள்ள முடியும். 

அன்னாசிப்பழத்தில் நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. இன்றைக்குப் பலரையும் பாடாப்படுத்தி வரும் ஒற்றைத் தலைவலி எனப்படும் ஒருபக்க தலைவலியைக் குணப்படுத்த அன்னாசிப்பழத்துடன் தேன் சேர்த்து 40 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நிவாரணம் கிடைக்கும். கூடவே மூளைக் கோளாறு, ஞாபகசக்தி குறைவு போன்றவையும் குணமாகும். சுவையான உணவாக இருப்பது மட்டுமின்றி, அன்னாசிப் பழத்தில் அதிகளவிலான ஆரோக்கியம் தரும் பொருள்கள் நிரம்பியுள்ளன. அன்னாசிப் பழத்தில் கால்சியம், மேங்கனீஸ், வைட்டமின் சி ஆகியவை உள்ளன.

மருத்துவர்கள், தொடர்ந்து அன்னாசிப் பழச்சாறு குடிப்பது கொழுப்பு சேராமல் தடுப்பதோடு, உடலில் உள்ள கொழுப்பு கரைவதற்கும் பயன்படுகிறது எனக்கின்றனர். சமீபத்தில் பிரபலங்களின் ஊட்டச்சத்து நிபுணரான கினிடா கடாக்கியா படேல் அன்னாசிப் பழத்தில் உள்ள ப்ரோமெலெயின் என்ற வேதிப்பொருள் செரிமானத்திற்கு உதவும் எனக் குறிப்பிட்டிருந்தார். 

தொண்டைப் புண், தொண்டையில் சதை வளர்ச்சி, நல்ல குரல் வளம் பெற விரும்புவோருக்கு அன்னாசிப்பழச் சாறு பலனளிக்கும்.  அதேபோன்று,  மஞ்சள்காமாலை, வயிற்றுவலி, இதய வலி போன்றவற்றையும் குணப்படுத்தும் தன்மை இந்தப் பழத்துக்கு உண்டு. மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் இதன் சாற்றை அருந்தி வந்தால் சீக்கிரம் குணமடைவார்கள்.  

குறிப்பாக,பித்தத்தால் வரக்கூடிய வாந்தி, கிறுகிறுப்பு, பசி, மந்தம் விலகவும் அன்னாசி நல்மருந்து. இந்தப் பழத்தில் புரதச்சத்து தாராளமாக இருப்பதால் செரிமானக் கோளாறு, உடலில் ஏற்படும் வீக்கம் போன்றவற்றைக் குணப்படுத்தும். குறிப்பாக இளம் பெண்கள் உள்பட அனைவரின் தொப்பையைக் கரைக்கும் சக்தி படைத்தது அன்னாசி பழம்.

மேலும், அன்னாசிப் பழத்தில் பதப்படுத்தப்பட்ட கொழுப்புகள் எதுவும் இடம்பெறவில்லை. பல்வேறு வைட்டமின்கள் இதில் இடம்பெற்றுள்ளன. உடல் எடைக் கூடிவிடும் என்ற அச்சம் இருந்தும், இனிப்பாக ஏதேனும் உண்ண வேண்டும் எனத் தோன்றினால் அன்னாசிப் பழம் சிறந்து.  ஏனெனில், அன்னாசிப் பழத்தில் இனிப்புகளை விட குறைவான கலோரிகள் இருக்கின்றன. ஐஸ் க்ரீம், அன்னாசிப் பழம் என இரண்டும் இருந்தால், அன்னாசிப் பழத்தைத் தேர்ந்தெடுத்து, இனிப்பையும் அனுபவித்து எடையையும் குறைக்கலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும். 

இத்தனை நன்மைகள் கொண்ட இந்தப் பழத்தில் சில தீமைகளும் உள்ளன. ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கும். இயற்கை சர்க்கரையை இது கொண்டிருப்பதால், சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. மேலும், இன்சுலின் அளவை அதிகரித்துவிடும் என்பதால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆன்டிபயாடிக், வலிப்புத் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்துவோர் இதைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது. மேலும், இந்தப் பழத்தை அதிகம் உட்கொண்டால் பற்களில் கறையை ஏற்படுத்திவிடும். பற்களின் எனாமலின் மீது எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்திவிடும். அதேபோன்று, கருச்சிதைவை ஏற்படுத்தும் என்பதால், கருத்தரித்த ஆரம்ப நாள்களில் இதைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது. 

click me!