
உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தரும் முக்கனிகளுள் வாழைப்பழம் ஒன்றாகும். வாழைப்பழம், ஒவ்வொன்றும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும், மருத்துவ பயன்களையும் உள்ளடக்கியவையாக உள்ளன.
எனவே, வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும், நன்மைகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அவை என்னென்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வாழைப்பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்:
1. வாழைப்பழம் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது. வாழைப்பழம் வைட்டமின் B6 இன் சிறந்த பழ ஆதாரங்களில் ஒன்றாகும். இது இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது. அதுமட்டுமின்றி, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளை வளர்சிதை மாற்றம் செய்யவும், அமினோ அமிலங்களை வளர்சிதை மாற்றம் செய்யவும், ஆரோக்கியமான நரம்பு மண்டலத்தை பராமரிக்கவும் உதவுகிறது.
2. உங்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களிலிருந்து தேவையற்ற இரசாயனங்களை அகற்றும் வாழைப்பழத்தில், 64.3 சதவீதம் தண்ணீர், 1.2 சதவீதம் புரதம், 24.7 சதவீதம் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
3. வாழைப்பழத்தில் (Banana) , வைட்டமின்-A, வைட்டமின்-B மற்றும் மெக்னீசியம் தவிர, பொட்டாசியம் மற்றும் வைட்டமின்-B6, தயாமின், போன்றவையும் உள்ளன. இது உங்கள் உடலை செல் மற்றும் திசு சேதத்திலிருந்து பாதுகாக்கிறது, கொலாஜனை உற்பத்தி செய்ய உதவுகிறது மற்றும் செரோடோனின் உற்பத்தி செய்வதன் மூலம் மூளை ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
4. மாதவிடாய் காலங்களில் எரிச்சல் மற்றும் வலியைக் குறைக்க வாழைப்பழம் உதவியாக இருக்கும். வாழைப்பழத்தில் போதுமான இரும்புச்சத்து உள்ளது, இது இரத்த சோகை அபாயத்தைக் குறைக்கிறது.
5. வாழைப்பழங்கள் செரிமானத்திற்கு உதவுவதோடு, இரைப்பை குடல் பிரச்சனைகளை போக்கவும் உதவும்.வாழைப்பழத்தில் உள்ள டிரிப்டோபான் அமினோ அமிலம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
தினமும் நீங்கள் வாழைப்பழம் சாப்பிடும் போது, இந்தெந்த வழிமுறைகளில் செய்து சாப்பிடுங்கள்.
பயன்படுத்தும் முறை:
1. வாழைப்பழத்தை வேர்க்கடலை வெண்ணெய் அல்லது பாதாம் வெண்ணெயுடன் பிசைந்து தோசைகளுடன் சேர்த்து சாப்பாட்டு வரலாம்.
2. பிசைந்த பழுத்த வாழைப்பழத்தை வெற்று தயிருடன் கலந்து சிறிது வேர்க்கடலை வெண்ணெய் சேர்க்கவும், பின்னர் ஆப்பிள் துண்டுகளுக்கு டிப் ஆக பருகலாம்.மேலும், வாழைப்பழத்தை சிப்ஸ் போல் மாலை வேளையில் சிநாக்ஸ் ஆக செய்தும் ருசிக்கலாம்.
3. உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் வாழைப்பழம் சாப்பிட, காலை 8 மணி முதல் 9 மணி வரை சரியான நேரம் ஆகும். அதேபோன்று, இரவு 7 மணி முதல் 8 மணி வரை சரியான நேரம் ஆகும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.