Sindoor benefits: பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவதின் நன்மைகள்... நமக்கு தெரியாத அறிவியல் ரகசியம்..!

Anija Kannan   | Asianet News
Published : Mar 14, 2022, 07:15 AM ISTUpdated : Mar 14, 2022, 07:18 AM IST
Sindoor benefits: பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவதின் நன்மைகள்... நமக்கு தெரியாத அறிவியல் ரகசியம்..!

சுருக்கம்

Sindoor benefits: நம்முடைய கலாசாரத்தின் படி, தினந்தோறும் பெண்கள் தங்களுடைய நெற்றியில் இட்டுக்கொள்ளும் குங்குமத்தின் அறிவியல் உண்மைகளை பற்றி இந்த பதிவில் தெறிந்து கொள்ளுங்கள்.

நம்முடைய கலாசாரத்தின் படி, தினந்தோறும் பெண்கள் தங்களுடைய நெற்றியில் இட்டுக்கொள்ளும் குங்குமத்தின் அறிவியல் உண்மைகளை பற்றி இந்த பதிவில் தெவ்றிந்து கொள்ளுங்கள்.

மங்கலத்தின் அடையாளமாக திகழும் குங்குமத்திற்கு, நம் இந்திய கலாச்சாரத்தில் அதீத முக்கியத்துவம் உண்டு. குங்குமம் என்றாலே அது பெண்களுக்கு உரிய மங்களகரமான பொருள். நெற்றியில் குங்குமப் பொட்டு இட்டுக்கொள்வது என்பது பெண்களுக்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். குறிப்பாக, திருமணமான பெண்கள் இந்த குங்குமத்தை தலையில் வைத்துக் கொள்வது வழக்கம்.

ஜோதிட முறைப் படி:

பூஜை செய்த குங்குமத்தை பெண்கள் தினம்தோறும் நெற்றியில் இட்டு வந்தால், அவர்களுடைய முகம் பொலிவாகும், அதாவது முகம் லட்சுமி கடாட்சம் தோடு இருக்கும். இந்த குங்குமத்தை இட்டுக் கொண்டு நீங்கள் எந்த நல்ல காரியத்திற்கு சென்றாலும் அது உங்களுக்கு வெற்றி தரக் கூடியதாக அமையும். மேலும், திருமணமான பெண்கள் இதுபோல் குங்குமத்தை தலையில் வைத்து கொள்வதால் அவர்களின் கணவன்மார்களின் ஆயுள் நீளும் என்று ஒரு ஐதீகம்.

குங்குமத்தின் நிறமான சிவப்பு என்பது இந்து கடவுள் பார்வதி தேவியின் அம்சமாகும். பெண்கள் குங்குமத்தை அணிந்து கொள்கிற போது பார்வதி தேவியின் பரிபூரண அருளை பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

திருமணத்தில் குங்குமம்: 

நம்முடைய பாரம்பரியத்தில்,  திருமண நிகழ்வுகளில் மங்கள சடங்காக இருப்பது குங்குமம் தான். இன்றும் கூட நம்முடைய திருமணத்தில், மணமகன் மணமகளுக்கு குங்குமம் வைக்கும் சடங்கு முக்கியமாக பின்பற்றப்படுகிறது.

மணநாள் அன்று மெட்டி இட்டு, மாங்கல்யம் அணிவிக்கும் சடங்குக்கு ஈடாக மணமகன் மணமகளுக்கு நெற்றி வகிடில் குங்குமம் வைப்பார். 

இது ஒரு புறம் இருக்க, அறிவியல் ரீதியாக நெற்றியில் குங்குமம் இட்டு கொள்வதற்கு, வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

1. குங்குமம் இயற்கையில் கிருமி நாசினியாக செயல்படும் தன்மை கொண்டது. அவற்றை புருவ மத்தி மற்றும் நெற்றி உள்ளிட்ட உடலின் பகுதிகளில் பூசுவதன் மூலம் உடலுக்கு நன்மை பயக்கும் என்கின்றனர்.

2. நெற்றியிலுள்ள இரு புருவங்களுக்கு இடையிலுள்ள நெற்றி பொட்டில் சிந்தனை நரம்புகள் ஒன்றாக கூடும் இடமாக இருப்பதால் அங்கு, மெதுவாக விரலால் தொடும் போது மனதில் மெல்லிய உணர்வு ஏற்படும். தியான நிலைக்கு அந்த உணர்வு அடிப்படையாக உள்ளது என்கின்றனர்.

3. சந்தனம் இடுவதால் நெற்றிப் பொட்டு குளிர்ச்சியாக மாறுவது போன்று, நெற்றியில் குங்குமம் இடுவது மன ஒருமை மற்றும் சிந்தனை தெளிவு ஆகியவற்றிற்கு உதவியாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது.  

4. பெண்களால் தலை வகிடு, நடு நெற்றி மற்றும் புருவ மத்தி ஆகிய பகுதிகளில் குங்குமம் அணியப்படுகிறது. குங்குமம்,  மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு ஆகியவற்றை கலந்து குங்குமம் தயாரிக்கப்படுகிறது. இவை மூன்றும் கிருமி நாசினியாக செயல்படும் பொருட்களாகும்.

மேலும் படிக்க... Today astrology: குரு உதயத்தால் இன்று முதல் மார்ச் 27 வரை...இந்த 7 ராசிகளுக்கு பம்பர் பலன்.. இன்றைய ராசி பலன்!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்