Kiss Day: முத்தம் என்னும் வித்தை!...முத்தத்தில் இத்தனை வெரைட்டியா...உங்கள் காதலியிடம் முத்தம் வாங்க ரெடியா..

Anija Kannan   | Asianet News
Published : Feb 13, 2022, 07:51 AM IST
Kiss Day: முத்தம் என்னும் வித்தை!...முத்தத்தில் இத்தனை வெரைட்டியா...உங்கள் காதலியிடம் முத்தம் வாங்க ரெடியா..

சுருக்கம்

ரொமான்டிக் வாரத்தின் 7- வது நாளான இன்று பிப்ரவரி 13-ம் தேதி ''முத்த தினம்". முத்தத்தில் இத்தனை வெரைட்டியா...

முத்தத்தை கொடுத்தாலும் சரி அன்பானவர்களிடம் இருந்து முத்தத்தை வாங்கினாலும் சரி உடலும் மனமும் உற்சாகம் அடையும். காரணம் முத்தத்தினால் ரத்த அணுக்களின் ஒவ்வொரு செல்லும் உற்சாகமடைகிறது. அன்பான முத்தம் தொடங்கி மருத்துவ முத்தம் வரைக்கும் பரபரப்பை ஏற்படுத்திய முத்தங்கள் உள்ளன.

பிப்ரவரி 14ஆம் தேதி வாலண்டைன்ஸ் டே காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளுக்காக ஏங்காத காதலர்களே கிடையாது எனலாம் . தற்போது, காதலித்துக் கொண்டிருப்பவர்கள், திருமணம் செய்த ஜோடிகள்,வயதான ஜோடிகள் என்று அனைவரும் தங்களுடைய காதலர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவார்கள். நாம் தினந்தேறும் நம் காதலி அல்லது காதலனிடம் அன்பை வெளிப்படுத்தினாலும் இந்த நாளன்று வெளிப்படுத்துவது ஒரு ஸ்பெஷல் தருணமாக மறக்க முடியாத நினைவாக கொண்டாடப்படுகிறது. 

உலக காதலர் வாரம் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்குகிறது.  இந்த மாதத்தில் பிப்ரவரி 7, 2022 ல் ஆரம்பித்து பிப்ரவரி 14 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஸ்பெஷல் இருக்கும். ரோஸ் தினம், ப்ரோப்போஸ் தினம், சாக்லேட் தினம், டெடி தினம், பிராமிஸ் தினம், முத்த தினம், கட்டிப்பிடித்தல் தினம், காதலர் தினம், என காதலைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள்.

இதில் நேற்று தழுவுதல் தினம் (Promise Day) முடிந்துவிட்டது. இன்று முத்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலை வெளிப்படுத்தும் தினமாக இது பார்க்கப்படுகிறது. காதலர்களின் முக்கியமான நாளாக இந்த  முத்த தினம் கருதப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் முத்த  தினம் கொண்டாடப்படுகிறது. சமூக வலைதளங்களிலும் முத்த தினம் என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

முத்த தினம் (kiss day) 

காதல் மொழி பேசும் மற்றொரு விஷயம் முத்தம். முத்தம் அன்பை காண்பிக்கும் இனிமையான வடிவம். அன்பை வெளிப்படுத்த எவ்வளவோ வழிகள் இருக்கலாம். ஆனால் உங்க துணைக்கு நெற்றியை வருடிக் கொடுத்து கொடுக்கும் முத்தம், குழி விழிந்த கன்னத்தில் முத்தம், இரு இதழ்கள் இணைந்த முத்தம் என்று அன்பை வெளிப்படுத்தும் விதமே தனி தான். எனவே இந்த நாள் அக்கறையுடன் காதலுடன் துணையை முத்தமிடுங்கள்.

 முத்தத்தில் இத்தனை வெரைட்டியா...

ஹாலிவுட் கிஸ்:- 
 
ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஆன இந்த முத்தத்தில் பல விதம் இருக்கிறது அதில் கிளுகிளுப்பான ஒன்று தான் பிரெஞ்ச் கிஸ், இது பெரும்பாலும் ஹாலிவுட் திரைப்படங்களில் சர்வசாதாரணமாக இடம்பெறுவதுண்டு. உதட்டை கவ்வி, நாவை சுழற்றி, எச்சிலை உறிந்து தன் ஒட்டுமொத்த காதலையும் ஒருசில நிமிட முத்தத்தால் வெளிப்படுத்துவது தான் இந்த  பிரெஞ்ச் கிஸ்.

லிப் லாக்:-
 
"காதல் இல்லா காமமும் இல்லை, காமம் இல்லா காதலும் இல்லை" அப்படி காதலும் காமமும் கலந்த அன்பின் வெளிப்பாடே இந்த  லிப் லாக் கிஸ். உங்கள் காதலருடனான உறவில் அதீத தீவிரத்தை உணர்த்தும்  முத்தம் இதுதான். இரண்டு உதடுகள் காணாது என்பது போல் காதலரின் உதட்டை இழுத்து உங்கள் உதட்டுடன் லாக்  செய்து கொள்ளும் முத்தமிது.

பட்டர்ஃபிளை கிஸ்:- 
 
காதலர்கள் ஒருவருக்கொருவர் பட்டாம்பூச்சி போல கண்ககளை உரசிக்கொண்டு மிக நெருக்கமாக நின்று கட்டியணைத்தபடி தரும் முத்தம் இது. ஜோடிகளின் கண் இமை முடிகள் ஒன்றோடு ஒன்று உரச வேண்டும். அந்த அளவுக்கு நெருக்கமா நின்றபடி கொடுத்தால் ஒருவருக்கொருவர் எந்த அளவிற்கு அக்கறை வைத்துள்ளார்கள் என்பதை காட்டிவிடும் இந்த முத்தம்.
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்