
ஜோதிட சாஸ்திரம், காதலர் வாரத்தின் கடைசி 2 நாட்களான இன்றும், நாளையும் சில ராசிக்காரர்களுக்கு காதலை சொன்னால் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று கணித்துள்ளது.
காதலர் வாரம் தொடங்கிவிட்டது. காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாட பலர் திட்டமிட்டுள்ளனர். காதலர்கள் தங்கள் ஜோடியை ஸ்பெஷலாக உணர வைக்க பல திட்டங்களை தீட்டி வருகின்றனர். பிப்ரவரி 7ம் தேதி முதல் 14ம் தேதி வரையிலான நேரம் காதலர்களுக்கு திருவிழா போல இருக்கும்.
ஜோதிட நிபுணர்களின் கூற்றுப்படி, காதலர் வாரத்தின் கடைசி 2 நாட்கள் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். காதலன் அல்லது காதலி மீது காதல் அதிகரிக்கும். காதலர் வாரத்தின் கடைசி 2 நாட்கள் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
மிதுனம்:
காதலர் வாரத்தின் கடைசி 2 நாட்கள் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். புதிதாக காதலை சொல்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். திருமணம் செய்துகொள்ளும் ஆர்வம் உடையவர்கள் தங்கள் காதலன் அல்லது காதலியை பெற்றோருக்கு இப்போது அறிமுகம் செய்தால், அவர்களது சம்மதமும் உடனே கிடைக்கும். திருமணமான தம்பதிகளிடையில் பரஸ்பரம் அன்பு வளரும். அன்பை முத்தம் கொடுத்து உணர வைத்து விடுவார்கள்.
கடகம்:
காதல் நாயகன் சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்கள் எப்போதும் காதல் மனநிலையில் இருப்பார்கள். அடிக்கடி முத்தம் கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்வார்கள். உங்கள் காதல் துணை, இந்த காலத்தில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கலாம். உறவில் அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். திருமணமான தம்பதிகள் ஒருவருக்கொருவர் இன்னும் நெருக்கமாவார்கள். இவர்களுக்கிடையே காதல், அன்பு ஆகியவை முன்பை விட அதிகரிக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும். காதல் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் காதல் உறவை ஏற்க தயாராவார்கள். புது ஜோடிகளுக்கு அன்பை வெளிப்படுத்த இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். கன்னத்தில் கொடுக்கும் மிகச்சிறிய முத்தத்தையும் கலை நயத்தோடு தருவதில் இந்த ராசிக்காரர்கள் கில்லாடி.
கன்னி ராசி
கன்னி ராசியினருக்கு காதலர் வாரத்தின் கடைசி காலம் சிறப்பாக இருக்கும். உங்கள் காதலன் அல்லது காதலியுடன் கருத்தியலாக ஒத்துப்போவீர்கள். உறவில் நெருக்கமும் பாசமும் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள இது ஒரு மிக நல்ல நேரமாக இருக்கும். உங்கள் காதல் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு முத்தம் கைவந்த கலை. மனதாலும் உடலாலும் முத்தத்தால் குளிர வைப்பதில் கில்லாடிகள்.
கும்பம்:
சனி பகவானை ராசி நாதனகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்கள் மென்மையானவர்கள். அன்பானவர்களுக்காக உருகி உருகி முத்தம் கொடுப்பார்கள். நீங்கள் கொடுத்து உதட்டு முத்தத்தினால் உங்கள் அன்பானவர் வெப்பத்தில் தகித்து விடுவார்கள். உங்களைப் போலவே நீங்கள் கொடுக்கும் முத்தமும் மென்மையானதாக ஆழமானதாக இருக்கும்.
துலாம்:
காதல் நாயகன் சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்கள் ரசனையானவர்கள். அன்பானவர்களுக்கு அசராமல் முத்தம் கொடுப்பதில் வல்லவர்கள். இவர்கள் விரும்பி கொடுக்கும் முத்தத்தை விட இவர்களைத் தேடி விரும்பி வரும் முத்தம்தான் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு முத்தமும் ரசிக்கும்படியாக இருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.