திருப்போரூர் கந்தசாமி கோவிலில் இன்று (13-ந்தேதி) தேரோட்ட உற்சவம் களைகட்ட உள்ளது.
திருப்போரூர் கந்தசாமி கோவிலில் இன்று (13-ந்தேதி) தேரோட்ட உற்சவம் களைகட்ட உள்ளது. தேரோட்டத்தின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருப்போரூர் கந்தசாமி கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் எழுந்தருளி மாட வீதிகளில் வீதி உலா வருகிறார்.
விண்ணிலிருந்து போர் புரிந்த இடமாக திகழும் திருப்போரூர் கந்தசாமி கோவிலில் ஆண்டுதோறும் 12 நாள் பிரம்மோற்சவம் நடைபெறும். கடந்தாண்டு கரோனா தொற்றுக் காரணமாக பிரம்மோற்சவம் விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.
செங்கல்பட்டு மாவட்டம். திருப்போரூர் கந்தசாமி கோயில் ஆழிசூழ் பூவுலகில் தர்மமிகு தொண்டை மண்டலத்தில் பழமையானதும் புராதான பெருமை கொண்டதும் யுத்தபுரி சமரபுரி சமரப்பதி எனும் காரணப்பெயர்களால் போற்றப்படுவதும் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப் பெருமைகளை கொண்டதுமான திருப்போரூர் திருத்தலம்.
திருப்போரூர் கந்தசாமி கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் எழுந்தருளி மாட வீதிகளில் வீதி உலா வருகிறார்.
5-ம் நாளான நேற்று முன்தினம் மங்களகிரியின் மீது வள்ளி, தெய்வானையுடன் கந்தசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், முக்கிய வீதிகளிலும் உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான நாளை (13-ந் தேதி) தேரோட்ட உற்சவம் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்ய உள்ளனர். தேரோட்டத்தின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாமல்லபுரம், ஆலத்தூர் வழியாக வரும் வாகனங்கள் கிரிவல பாதை வழியாக காலவாக்கம் சென்று ஓ.எம்.ஆர் சாலையில் இணைந்து செல்லலாம். செங்கல்பட்டு, ஆலத்தூர் வழியாக செல்லும் பஸ்கள் நகருக்கு வெளியே நிறுத்தி இயக்கப்படும்.
சென்னையில் இருந்து கேளம்பாக்கம் வழியாக ஓ.எம்.ஆர்.சாலையில் கோயிலுக்கு வரும் வாகனங்கள் நகருக்கு வெளியே புதிய புறவழிச் சாலை மூலம் கோவிலுக்கு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கூட்ட நெரிசல் மற்றும் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
வரலாறு:
முருகப்பெருமான் அசுரர்களை எதிர்த்து நிலம், ஆகாயம், கடல் ஆகிய மூன்று பகுதிகளில் நின்று போரிட்டு வெற்றி கண்டார். அசுரர்களின் கர்மத்தை நிலத்தில் நின்று போரிட்டு திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அடக்கினார். அவர்களின் மாயையை கடலில் நின்று போரிட்டு திருச்செந்தூரிலே வெற்றி கண்டார். இவ்வகையில் அசுரர்களின் ஆணவத்தை விண்ணில் நின்று முருகப்பெருமான் அடக்கி, ஒடுக்கிய இடமே திருப்போரூர் திருத்தலம் ஆகும்.
அசுரர்களுடன் முருகப்பெருமான் போரிட்டபோது, மாய வித்தைகள் மூலம் மறைந்திருந்து அசுரர்கள் போர்புரிந்தனர். இதனை தனது ஞான திருஷ்டியாலும், பைரவரின் துணையோடும் கண்டறிந்து முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். இவ்வாறு மறைந்திருந்த அசுரர்கள், முருகப் பெருமானின் கண்களில் அகப்பட்ட இடமே இன்றும், கண்ணகப்பட்டு என்ற இடமாக திருப்போரூர் அருகில் உள்ளது.