
குரு பெயர்ச்சி 2022:
குரு பார்த்தாலே கோடி நன்மை என்று சொல்லும்போது, அவரின் அருட்பார்வை விழுந்தால் ஒருவரின் செல்வ செழிப்பு அற்புதமாக இருக்கும். ஆனால், ஒருவர் கொடுத்தால், அதை கெடுக்க மற்றொருவர் இருப்பார். அதுதானே விதியின் வலிமை.
அப்படியாக, குரு பகவான் அருளை சனி பகவான் தடுப்பதால் சில ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் உண்டு. சில ராசிகளுக்கு பிரச்சனைகள் ஆரம்பமாகும். இன்றைய 12 ராசிகளின் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு குருவின் நன்மையால் முன் கோபத்தால் சில விஷயங்களை இழக்க நேரும் என்பதால் கோபத்தை கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை, உங்களுடைய உழைப்பை இரட்டிப்பாக கொடுக்க வேண்டி இருக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு குருவின் நன்மையால், தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறவுகளுக்கு இடையே பேச்சு வார்த்தைகள் நடக்கும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு குருவின் நன்மையால், செலவிடக் கூடிய நல்ல நாளாக இருக்கும். பொது விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய உத்திகள் சிந்தையில் உதிக்கும். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு குருவின் நன்மையால், உங்களுடைய வருமானம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. புதிய வேலை தேடி அலைபவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் கிடைக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு குருவின் நன்மையால், நன்மையாக இருக்கும். இதுவரை இருந்து வந்த நிலை மாறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பழைய சிக்கல்களையும் முடித்து வைக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத விதத்தில் சில அனுகூலமான பலன்கள் கிட்டும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு குருவின் நன்மையால், சந்தோஷமான நாளாக இருக்கும். உங்களுடைய முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். எல்லோரிடத்திலும் அனுசரணையாக நடந்து கொள்வீர்கள். கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். எதிலும், கவனமாக இருங்கள்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு குருவின் நன்மையால், சந்தோஷமான நாளாக இருக்கும். கிடப்பில் கிடந்த வேலைகளெல்லாம் முடிவுக்கு வரும். அரசாங்க வேலையில் கொஞ்சம் இழுபறி இருக்கும். சொந்தத் தொழிலில் நல்ல லாபம் உண்டு. போட்டி தேர்வுகளில் வேற்றி நிச்சயம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு குருவின் நன்மையால், சிறப்பாக இருக்கும். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முதலீடு செய்து தொழிலை விரிவுபடுத்தலாம். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு குருவின் நன்மையால், முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் நிறைவாக இருக்கும். பிள்ளைகளால் மனநிறைவு கிடைக்கும். மரியாதை உயரும். தொட்டது துலங்கும். தொழிலில் லாபம் கிடைக்கும். திருமணம் கைக்கூடும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு குருவின் நன்மையால், மனநிறைவான நாளாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் காணப்படும். உங்களுக்கு வந்த பிரச்சனை விலகும்.
கும்பம்:
கும்ப ராசி காரர்களுக்கு குருவின் நன்மையால், எல்லாம் நிறைந்த நல்ல நாளாகத்தான் இருக்க போகின்றது. கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை வரும். முன் கோபம் வரும் போது மனதை அமைதிப்படுத்த தியானம் செய்து பழகுங்கள். எதிலும், முன்னேற்றம் இருக்கும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு குருவின் நன்மையால், அவசியம் தேவை. உங்களுடைய வேலையை முன் பின் நேரமானாலும், நீங்களே செய்து முடித்து விடுங்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். எப்பவும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். தொட்டது துலங்கும். வாழ்வில் வெற்றி நிச்சயம்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.