Sevvai Peyarchi: மீன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி....இந்த ராசிகளுக்கு அதிஷ்ட பலன்..இன்றைய 12 ராசிகளின் பலன்கள்

Anija Kannan   | Asianet News
Published : May 17, 2022, 05:29 AM IST
Sevvai Peyarchi: மீன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி....இந்த ராசிகளுக்கு அதிஷ்ட பலன்..இன்றைய 12 ராசிகளின் பலன்கள்

சுருக்கம்

Sevvai Peyarchi Palangal 2022: கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய், கும்ப ராசியில் இருந்து மே 17ம் தேதி  அதாவது இன்று, மீன ராசிக்கு செல்கிறார். இன்றைய 12 ராசிகளின் பலன்களை பற்றி தெரிந்து கொள்வோம். 

கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய், கும்ப ராசியில் இருந்து மே 17ம் தேதி மீன ராசிக்கு செல்கிறார். இன்றைய 12 ராசிகளின் பலன்களை பற்றி தெரிந்து கொள்வோம். 

செவ்வாய் பெயர்ச்சி 2022: 

ஏற்கனவே, மகர ராசியில் பயணித்து வரும் செவ்வாய், ஏப்ரல் மாதத்தில் முதன் முதலாக சனி பகவான் ஆளும் கும்ப ராசிக்கு செல்கிறார். இதையடுத்து மீண்டும், மே 17ம் தேதி மீன ராசிக்கு செல்கிறார். இப்பெயர்ச்சியால், சில ராசிகளுக்கு சற்று சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சிலருக்கு, சுப பலன்கள் கிடைக்கும். யாருக்கு என்னென்ன பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

மேஷம்: 

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும் செவ்வாய் பெயர்ச்சி, சிறப்பாக இருக்கும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வேண்டிய லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நண்பர்களின் அறிமுகம் பெறுவார்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை வலுவாகும். ஆரோக்கியம் மேம்படும். 

ரிஷபம்: 

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும் செவ்வாய் பெயர்ச்சி, சுபமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். 

மிதுனம்: 

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும் செவ்வாய் பெயர்ச்சி, சாதகமான பலன் அமையும். குடும்ப உறவுகள் மேம்படும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மறையான சிந்தனை பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிலும், ஆடம்பரம் இல்லாமல் இருப்பது நல்லது. 

கடகம்: 

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும் செவ்வாய் பெயர்ச்சி, உங்களுக்கு இடையூறுகள் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே உறவுகள் மேம்படும். குடும்பத்தில் பெரியவர்களை மதித்து நடப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எடுக்கும் முடிவுகளில் சாதக பலன் உண்டு. 

சிம்மம்: 

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும் செவ்வாய் பெயர்ச்சி, உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பாக செயல்படுவது அவசியம். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். 

கன்னி: 

கன்னியில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும் செவ்வாய் பெயர்ச்சி, இந்த நாள் உங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவது நல்லது. குடும்ப உறவுகளுக்கு இடையே வாக்கு வாதங்கள் தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான முன்னேற்றம் பிறக்கும். ஆரோக்கியம்  மேம்படும்.

துலாம்: 

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும் செவ்வாய் பெயர்ச்சி, இனிமையாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகள் விலகி ஓடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கடுமையாக உழைப்பு தேவை. உங்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். 

விருச்சிகம்: 

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும் செவ்வாய் பெயர்ச்சி, நல்ல நாளாக இருக்கும். தேவையற்ற விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் இருப்பது அவசியம். தொழில் மற்றும் வியாபாரத்தில்  புதிய உத்திகளை கையாளுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் பழி உண்டாகும்.

தனுசு: 

தனுசில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும் செவ்வாய் பெயர்ச்சி, அற்புதமான நாளாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்குஎதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். 

மகரம்: 

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும் செவ்வாய் பெயர்ச்சி, மனம் நிறைவு இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பண விஷயத்தில் சாதகமான பலன்கள் உண்டு. உறவினர்களின் ஆதரவு பெருகும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மன இறுக்கம் குறையும். 

கும்பம்: 

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும் செவ்வாய் பெயர்ச்சி, சொந்த முயற்சி கை கொடுக்கும்.   தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வேண்டிய பலன் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைப்பதில் சாதக பலன் உண்டு. 

மீனம்: 

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும் செவ்வாய் பெயர்ச்சி, உங்கள் திறமைகளை வெளி உலகிற்கு காட்ட கூடிய நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் உண்டாகும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

மேலும் படிக்க...இன்று பவுர்ணமியுடன் கூடிய சந்திர கிரகணம்...இந்த ராசிகளுக்கு மட்டும் ராஜயோகம் ..இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்