
தமிழ் மாதங்களில் இரண்டாவதாக வரும் மாதமாக வைகாசி மாதத்தில், சூரியன் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ந்துள்ளார். வைகாசி மாத பெளர்ணமியன்று சித்தார்த்தன் என்ற இயற்பெயர் கொண்ட கெளதம புத்தர் பிறந்தார்.
புத்த பூர்ணிமா 2022:
இந்தியாவின் புத்தகயாவில் ஆறு ஆண்டுகள் கடும் தவம் புரிந்து, புத்தர் இந்த தினத்தில் ஞானம் பெற்று கொண்டாடார். புத்த பூர்ணிமா பண்டிகைக்கு வேறு சில பெயர்களும் உண்டு. அதாவது புத்த ஜெயந்தி, விசாக், வைசாகா மற்றும் புத்தர் பிறந்தநாள் என்றும் இது அழைக்கப்படுகிறது.
மன்னரின் மகனாக பிறந்தாலும், மக்களின் வாழ்விற்காக அனைத்தையும் துறந்த மகான் புத்தார். இவர், தனது 29வது வயதில் வெளி உலகை காண கிளம்பினார். உலக மக்களின் துன்பத்திற்கு காரணம் என்ன என்பதைத் தேடி அலைந்தார்.
புத்த பூர்ணிமா எப்போது கொண்டப்படுகிறது..?
வைகாசி பெளர்ணமி தினமான 2022 மே 16ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 2022ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி நண்பகல் 12.45 மணிக்கு தொடங்கி பூர்ணிமா திதி, அதற்கு அடுத்த நாள் மே 16ஆம் தேதி காலை 9.43 மணி வரையிலும் நீடிக்கிறது. இதனால், இன்று இரவு 9 மணி வரை நீங்கள் பூஜை விதிகளை கடைபிடிக்கலாம்.
வழிபாட்டு முறை:
வைகாசி மாத பவுர்ணமி தினம், பெளத்தர்களுக்கு மட்டுமல்ல, இந்துக்களுக்கும் மிகவும் முக்கியமான நாள். எனவே இந்த நாளில், விரதம் இருந்து மாலையில் முழு நிலவாக தோன்றி, முழுமையாக காட்சியளிக்கும் சந்திர பகவானை வழிபடுவது மிகவும் சிறந்தது.
இந்த நாளில், விரதம் அனுஷ்டிப்பதன் மூலம், விஷ்ணு மற்றும் யமராஜாவிடம் இருந்து தெய்வீக வரம் பெறலாம் மற்றும் கோர மரண பயத்திலிருந்து விடுபடலாம்.
அதுமட்டுமின்றி, மனஅழுத்தம், மனச்சோர்வு என மனரீதியான பிரச்சனைகளையும் இன்றைய விரதம் தீர்க்கும். வாழ்வில் புது ஒளி பிறக்கும். தெய்வீக யோகம் கிடைக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.