புஸ்ஸுன்னு குறைந்து டமால்னு மீண்டும் எகிறிய தங்கம் விலை..!

Published : Aug 14, 2019, 04:52 PM IST
புஸ்ஸுன்னு குறைந்து டமால்னு மீண்டும் எகிறிய தங்கம் விலை..!

சுருக்கம்

நேற்று மாலை கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 3627 ரூபாயாக இருந்தது. அப்படிப்பார்த்தால் சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 16 ரூபாய்க்கு விற்பனையானது

கடந்த சில தினங்களாக தாறுமாறாக உயர்ந்து வந்த தங்கம் நிலையில் இன்று கிராமுக்கு 51 ரூபாய் குறைந்து உள்ளது. அதன்படி பார்த்தால் சவரனுக்கு 408 ரூபாய் குறைந்து உள்ளது.

நேற்று மாலை கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 3627 ரூபாயாக இருந்தது. அப்படிப்பார்த்தால் சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 16 ரூபாய்க்கு விற்பனையானது.நேற்று சவரன் விலை 29 ஆயிரத்தை கடந்ததால் வரலாற்றில் புதிய உச்சம் அடைந்து உள்ளது என்பதை காட்டுகிறது. இப்படியே சென்றால் இன்னும் சில நாட்களில் 30 ஆயிரத்தைத் தாண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது.

அதே நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றாலும் கூட இன்றைய நிலவரப்படி குறைந்தது 30 முதல் 34 ஆயிரம் ரூபாய் ஆகும் நிலை ஏற்பட்டு உள்ளது இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராம் ரூ. 3576.00 (-51 ரூபாய்  குறைவு), சவரனுக்கு 408 குறைந்து, 28 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு 3578.00 (2 அதிகரிப்பு), சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 616 ரூபாய்க்கு  விற்பனையானது.

வெள்ளி விலை  நிலவரம்..!  

கிராமுக்கு  50 பைசா அதிகரித்து 47.90 ரூபாயாக உள்ளது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Pongal 2026: பொங்கல் எந்த திசையில் பொங்கி வழிந்தால் அதிர்ஷ்டம்? இந்த திசையில் மட்டும் பொங்க கூடாது.!
குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!