கெத்து காட்டும் திமுக..! வண்டி வண்டியாய் நிவாரண பொருட்களை வழங்கி அசத்தல்..!

By ezhil mozhiFirst Published Aug 14, 2019, 3:31 PM IST
Highlights

கேரள மாநிலத்தில் நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் 82 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள, இன்று காலை,சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து ஸ்டாலின் ‪கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

கேரள மாநிலத்தில் நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் 82 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள, இன்று காலை,சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து ஸ்டாலின் ‪கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

கேரள மாநில மக்களுக்கு உதவிடும் வகையில், அரிசி, சேலை, லூங்கி, சட்டை உள்ளிட்ட துணிமணிகள், போர்வை, தண்ணீர் பாட்டில், ஸ்டீல் தட்டு, டம்ளர், பிளாஸ்டிக் பக்கெட், மெழுகுவர்த்தி, கொசுவர்த்திகள், ரொட்டி, ரெஸ்க், பிஸ்கட் உள்ளடக்கிய உணவுப் பொருட்கள் நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில், டூத்பேஸ்ட், டூத்பிரஷ், நாப்கின், மருந்துப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடக்கிய பல்வேறு  நிவாரண பொருட்கள் அடங்கிய 10க்கும் மேற்பட்ட லாரியினை, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்வின் போது பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, எம்.பி, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி, மத்திய சென்னை  நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், எம்.பி, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.

அப்போது பேசிய ஸ்டாலின், "முதல்வருக்கு நீலகிரி செல்ல நேரமில்லை.... அமெரிக்கா செல்வதில் தான் ஏற்பாடு விரைவாக செய்து வருகிறார். தமிழகத்தில் ஆளும் கட்சி செயல்படாமல் உள்ளது" என தெரிவித்து உள்ளார். 

click me!