Goat Intestine Benefits : வாரம் ஒரு முறை ஆட்டுக்குடல் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பற்றி இந்த பதிவில் காணலாம்.
அசைவத்தில் கோழி, ஆடு, மாடு, மீன் என பல வகைகள் உள்ளன. ஆனால் அசைவப் பிரியர்கள் பலர் விரும்பி சாப்பிடுவது ஒன்று எதுவென்றால் அது ஆடு தான். ஆட்டுக்கறி சாப்பிடுவதற்கு ருசியாக இருப்பது மட்டுமின்றி, இதில் ஏராளமான சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன. அசைவு பிரியர்கள் ஆட்டின் அனைத்து உறுப்புகளையும் விரும்பி சமைத்து சாப்பிட்டாலும், பலரும் சமைத்து விரும்பி சாப்பிடுவது ஆட்டின் குடல் தான். ஆம், வாரத்திற்கு ஒரு முறை ஆட்டின் குடலை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?ஆட்டின் குடலில் குழம்பு, வறுவல் என எப்படி சமைத்து சாப்பிட்டாலும் ஆரோக்கியத்திற்கு அதன் முழு பலன்களும் கிடைக்கும்.
ஆட்டின் குடலில் இருக்கும் சத்துக்கள்:
ஆட்டு இறைச்சி புரோட்டீனின் சிறந்த வளமாக கருதப்படுகிறது. மேலும் ஆட்டின் குடலில் மெக்னீசியம், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து போன்ற கனிமங்களும்; வைட்டமின் கே, வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் கே போன்ற கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களும் அதிகமாகவே உள்ளது. கூடுதலாக, இதில் அத்தியாவாசிய அமினோ அமிலங்களும் இதில் நிறைந்துள்ளன.
இதையும் படிங்க: கம கம மட்டன் கீ ரோஸ்ட் மசாலா செய்வது எப்படி?
ஆட்டுக்குடல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
ஆட்டு குடலில் இருக்கும் புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் 12 போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும், உடல் செயல்பாடுகளை ஆதரிக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆட்டுக்குடலின் பிற நன்மைகள் இங்கே:
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: ஆட்டுக்குடலில் இருக்கும் துத்தநாகம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக வைக்க உதவுகிறது.
மூளையின் செயல்பாட்டுக்கு உதவும்: ஆட்டுக்குடலில் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தேவையான அளவு கோலைன் உள்ளது. இது மூளையின் செயல்பாடு மற்றும் அறிவாற்றல் செயல்திறனை ஆதரிக்க உதவுகிறது.
தசைகளின் வளர்ச்சிக்கு: ஆட்டுக்குடலில் இருக்கும் கிரியேட்டின் தசைகளை வலிமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் இது தசைகளின் செயல்படும் மற்றும் சகிப்புத்தன்மையை அதிகரிக்கச் செய்யும்.
குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது: ஆட்டு குடலில் இருக்கும் மியூசியம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, குடல் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
ஆட்டுக்குடலில் இப்படி பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளதால் அதில் சுவையான குழம்பு செய்வது எப்படி என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மட்டன் கோலா உருண்டை குழம்பு.. இப்படி செஞ்சு அசத்துங்க!!
ஆட்டுக்குடலில் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
ஆட்டுக்குடல் - 1
இஞ்சி - சின்ன துண்டு
பூண்டு - 5
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தேங்காய் துருவல் - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 200 கிராம்
மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பட்டை - 2
இலவங்கம் - 2
ஏலக்காய் - 1
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
ஆட்டு குடல் குழம்பு செய்ய முதலில் பெரிய வெங்காயம், கொத்தமல்லி இலை, தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு குடலை நன்றாக கழுவி வைத்துக் கொள்ளுங்கள். இதனை அடுத்து இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு சின்ன வெங்காயம், தேங்காய் துருவல் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பட்டு சோம்பு, இலவங்கம், ஏலக்காய் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். அடுத்ததாக தக்காளியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். தக்காளி நன்கு மசிந்ததும் அதில் மிளகாய் தூள், மல்லித்தூள் சோம்பு, சீரகப்பொடி உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதங்கி கொள்ளுங்கள். அதன் பின்னர் குடலையும் சேர்த்து கொள்ளுங்கள். இதனுடன் தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது குக்கரை 10 விசில் விட்டு இறக்கவும். குக்கரில் விசில் போன பிறகு மூடியை திறந்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். இறுதியாக கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மட்டன் குடல் குழம்பு தயார்.