LPG Gas Saving Hacks : கேஸ் சிலிண்டர் 'இப்படி' தான் யூஸ் பண்ணணும்!! 2 மாசம் ஆனாலும் சிலிண்டர் காலி ஆகாது!

Published : Sep 11, 2025, 01:55 PM IST
gas cylinder saving tips

சுருக்கம்

கேஸ் சிலிண்டரை இரண்டு மாசம் வரை சேமிக்க அதை எப்படி மிச்சப்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கேஸ் சிலிண்டர் தற்போது அனைவரது வீட்டிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. மக்களின் தேவை அதிகரிப்புக்கு ஏற்ப கேஸ் சிலிண்டரின் விலையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே, அதை மிச்சப்படுத்துவது தான் இல்லத்தரசிகளின் ஒரே குறிக்கோளாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், சில டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்தலாம். சிலிண்டருக்கான செலவையும் மிச்சப்படுத்தலாம் மிச்சப்படுத்தலாம். முக்கியமாக 2 மாசமானதும் சிலிண்டர் காலியாகாது. அப்படி என்ன டிப்ஸ்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

கேஸ் சிலிண்டரை மிச்சம்ப்படுத்த டிப்ஸ்கள் :

1. சிலிண்டர் மிச்சப்படுத்த அதை ஆன் செய்வதற்கு முன் முதலில் சிம்மில் வைத்துக் கொள்ளவும். பிறகு ஆன் செய்யவும். ஏனெனில் பாத்திரத்தின் அடிப்பகுதிக்குள் மட்டுமே தான் நெருப்பு ஏறியனும். அதற்கு மேல் எறியும்படி வைக்க கூடாது. இல்லையெனில் அதிகளவு கேஸ் வீணாகும்.

2. நான் ஒரு நாளைக்கு 2-4 முறையாவது பாலை சூடுப்படுத்துகிறோம். அப்படி பழைய சூடு படுத்தும்போது ஒரு சுத்தமான குழி கரண்டியை அதனுள் போட்டு வையுங்கள் இப்படி நீங்கள் செய்யும் போது பால் பொங்கி வழியாது. கேஸும் வீணாகாது. முக்கியமாக சிம்மில் வைத்து எப்போதுமே பாலை காய்ச்சவும். இதனால் நிறைய கேஸ் சேமிக்க முடியும்.

3. பிரிட்ஜில் இருந்து காய்கறிகளை எடுத்த உடனே சமைக்க வேண்டாம். ஒரு மணி நேரம் வெளியே வைத்து விட்டு பிறகு சமைக்கவும். இதனால் சீக்கிரம் சமைக்கப்படும் கேஸ் வீணாவது தடுக்கப்படும். காய்கறிகள் மட்டுமல்ல பிரிட்ஜில் இருந்து எடுக்கும் எந்தவொரு பொருளையும் உடனே சமைக்காதீர்கள்.

4. இறைச்சி, பருப்பு வகைகளை வேக வைப்பதற்காக அதிக விசிலில் வைக்க வேண்டியிருக்கும். ஆனால் அப்படி வேகவைக்கும் முன் ஒரு சின்ன கொட்டாங்குச்சியை கழுவி குக்கருக்குள் போடவும். இப்படி செய்தால் சீக்கிரமே அவைகள் வெந்துவிடும். அதிக அளவு கேஸ் மிச்சமாகும்.

5. கேஸ் அடுப்பில் சமைக்கும்போது கிச்சன் ஜன்னல் திறந்து வைக்க வேண்டாம். அதுபோல அருகில் இருக்கும் ஃபேனையும் ஆப் செய்யவும். இதனால் நெருப்பு அலையானது பாய்ந்து கேஸ் வீணாக வாய்ப்பு உள்ளது.

6. சமைக்கும் முன் சமைக்கக்கூடிய எல்லா பொருட்களையும் சுலபமாக எடுக்கும்படி அருகில் வைத்துக் கொள்ளுங்கள் இதனால் நேரம் வீணாகாது. கேஸ்சும் வீணாவது தடுக்கப்படும்.

7. நீங்கள் சமைக்கும் பாத்திரத்தின் அடிப்பகுதி தட்டையாக பறந்து விரிந்து இருந்தால் அதிகமான கேஸ் செலவாகாது. அதுவே குழியாக இருந்தால் கண்டிப்பாக நிறைய கேஸ் செலவாகும். எனவே சமைக்கும் பாத்திரத்தில் கொஞ்சம் கவனம் தேவை.

8. அரிசி, பருப்பு, பயறு, தானியங்கள் போன்றவற்றை ஊறவைத்து சமையுங்கள். அதிக நேரம் ஊற வைத்தால் கொஞ்சமாக கேஸ் செலவாகும். அதுவே குறைந்த நேரம் ஊற வைத்தால் நிறைய கேஸ் வீணாகும்.

9. ஈரத்துடன் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சமைக்கும் போது அந்தத் தண்ணீர் வற்றுவதற்கு நேரம் எடுக்கும். எனவே துடைத்துவிட்டு பிறகு பாத்திரத்தை பயன்படுத்தவும்.

10. கேஸ் அடுப்பு பயன்படுத்தும் போது அதை நெருப்பு எப்போதுமே ப்ளூ கலரில் தான் இருக்க வேண்டும். இல்லையெனில் பர்னர் சேதாரமாயிருக்கலாம். எனவே மாதத்திற்கு ஒரு முறையாவது பர்னரை சுத்தம் செய்யுங்கள்.

11. சமைக்கும்போது அவ்வப்போது மூடி வைத்து சமைக்கவும். இதனால் சமையல் நேரம் குறையும், சிலிண்டர் வீணாகாது.

12. முடிந்த அளவுக்கு குறைந்த தீயிலே வைத்து உணவை சமைக்கவும். இதனால் குறைந்த கேஸ் தான் செலவாகும்.

13. சிலிண்டரை எப்போதுமே வெளிச்சம் உள்ள இடத்தில் வைக்கவும். இதனால் கேஸ் கசிவு அபாயம் குறையும்.

14. அதுபோல பலருக்கும் சமைத்த பிறகு சிலிண்டரை அணைக்கும் பழக்கம் இல்லை. ஆனால் அப்படி செய்வது தவறு. நீங்கள் சிலிண்டரை அணைக்கவில்லை என்றால் கேஸ் அதிகம் கசிய வாய்ப்பு உள்ளது. எனவே சமைத்த பிறகு கண்டிப்பாக சிலிண்டரை அணைக்கவும்.

15. பழைய சிலிண்டர் காலியான பிறகு புதிய சிலிண்டர் வாங்கும்போது அதில் சீல் சரியாக உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். ஒருவேளை அதன் ரெகுலேட்டர் சரியாக இல்லை என்றால் கண்டிப்பாக கேஸ் கசியும்.

மேலே சொன்ன டிப்ஸ்களை நீங்கள் பின்பற்றி வந்தால், ஒரு மாசம் வரை பயன்படுத்திய சிலிண்டர் இப்போது இரண்டு மாதம் ஆனாலும் காலியாகாமல் ஓடும். ட்ரை பண்ணி பாருங்க.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்கள்