Garlic Tea : என்னங்க சொல்லுறீங்க 'பூண்டில்' டீயா? கோடி நன்மைகள் .. எப்படி தயாரிக்கனும்?

Published : Nov 25, 2025, 12:41 PM ISTUpdated : Nov 25, 2025, 12:43 PM IST
garlic tea

சுருக்கம்

இந்த பதிவில் பூண்டில் 'டீ' தயாரிக்கும் முறை மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பது பற்றி தெரிந்துகொள்ளலாம்.

பூண்டு நாம் சமைக்கும் உணவில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருள். ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட பூண்டு பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகின்றது. பூண்டில் கலோரிகள் குறைவாகவும், ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன. குறிப்பாக வைட்டமின் சி, வைட்டமின் பி6, நார்ச்சத்து, செலினியம், மாங்கனீஸ் போன்றவை பூண்டில் ஏராளமாக உள்ளது.

மேலும் பூண்டில் இருக்கும் அல்லிசின் என்னும் பண்பு, கொலஸ்ட்ராலை குறைக்கவும், இரத்தம் உறைவதைத் தடுக்கவும் உதவுகிறது மற்றும் இதில் இருக்கும் ஆன்டி பாக்டரியல் பண்புகள் நோய் தொற்றுக் கிருமிகளை எதிர்த்து போராடும், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.

இப்படி பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் பூண்டில் தேநீர் தயாரித்தும் குடிக்கலாம் தெரியுமா? இந்த தேநீரை தினமும் ஒரு கிளாஸ் காலையில் குடித்து வந்தால் உடலில் பல அற்புத மாற்றங்கள் நிகழும். இந்த பதிவில் பூண்டு டீ தயாரிக்கும் முறை மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

பூண்டு டீ தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள் :

பூண்டு - 5 பற்கள் 

தேன் - 2 ஸ்பூன் 

எலுமிச்சை சாறு - 1/2 கப் 

தண்ணீர் - 3 கப்

பூண்டு டீ தயாரிக்கும் முறை :

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்றி சின்ன சின்னதாக நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும். பிறகு ஓரளவு சூடு ஆறியதும் அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும். அவ்வளவுதான் பூண்டு டீ ரெடி!

பூண்டு டீ ஆரோக்கிய நன்மைகள் :

- உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு பூண்டு டீ பெரிதும் உதவும். ஏனெனில் இதில் இருக்கும் பண்புகள் கொழுப்பை குறைக்கும், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் பசியை கட்டுப்படுத்தும்.

- சளி, இருமல், தொண்டைக்கட்டு, தொண்டைப்புண், காய்ச்சல் மற்றும் சைனஸ் தொற்று ஆகிய பிரச்சினைகள் அவதிப்படுபவர்கள் தினமும் பூண்டி டீ குடியுங்கள்.

- இரத்த அழுத்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் பூண்டு டீ தினமும் குடித்து வந்தால், உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

- பூண்டில் இருக்கும் அல்லிசின் மற்றும் செலினிகயம் என்னும் பண்புகள் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவும்.

- தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பல வகையான புற்றுநோயின் தாக்கத்தை தடுக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

- இளம் வயதிலேயே சருமம் சுருக்கம் ஏற்படுவதை தடுக்க தினமும் பூண்டு டீ குடிக்கலாம்.

- பூண்டில் ஆன்டி பாக்டரியல், பூஞ்சை எதிர்ப்பு போன்ற பண்புகள் உள்ளன. அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்புபவர்கள் தினமும் போன்ற டீ குடியுங்கள்.

- தினமும் போன்ற டீ குடித்து வந்தால் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்துவிடும். இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

குறிப்பு : பூண்டு டீ ஆரோக்கியமானது என்றாலும், மருத்துவரிடம் ஒரு முறை ஆலோசனை கேட்டுவிட்டு பிறகு குடிக்கவும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Richest Villages In Tamil Nadu: இந்தியாவையே வியக்க வைக்கும் தமிழகத்தின் பணக்கார கிராமங்கள்..!
Mental Health: உங்க மூடை சூப்பரா மாத்தணுமா? இந்த சிம்பிள் பழக்கங்களை ஃபாலோ பண்ணுங்க!