Elephant Foot Yam : பெண்களே! சேனைக்கிழங்கை ஒதுக்காதீங்க; உங்க ஆரோக்கியத்திற்கு ரொம்ப தேவை!! முழுவிவரங்கள்

Published : Nov 21, 2025, 04:20 PM IST
 Elephant Foot Yam

சுருக்கம்

சேனைக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன? யாரெல்லாம் அதை சாப்பிட கூடாது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சேனைக்கிழங்கு என்பது கிழங்கு வகைகளில் ஒன்றாகும். இது நாக்கில் அரிப்ப, வாயு தொல்லை, எடையை அதிகரிப்பு மற்றும் ரத்த சர்க்கரை அளவை அதிகமாக்கும் போன்ற சில பல காரணங்களுக்கு பயந்து சிலர் இதை ஒதுக்கி வைப்பார்கள். ஆனால் இதில் நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாதா அளவிற்கு ஏராளமான நன்மைகள் கொட்டி கிடைக்கின்றன. அது என்ன என்று தெரிந்தால் இனி அடிக்கடி சாப்பிடுவீர்கள்.

சேனைக்கிழங்கில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் :

சேனைக்கிழங்கில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, சர்க்கரை, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கொட்டி கிடைக்கின்றன.

சேனைக்கிழங்கு சாப்பிடுவதன் ஆரோக்கியம் நன்மைகள் :

1. எடையை குறைக்க உதவும்

சேனைக்கிழங்கில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளன. எனவே எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் சனிக்கிழமை வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிடுங்கள்

2. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்

சேனைக்கிழங்கில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன. அவை இரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இதனால் இதய ஆரோக்கியமாக இருக்கும்.

3. மன அழுத்தம் குறையும்

சேனைக்கிழங்கில் இருக்கும் வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவை உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மன அழுத்தத்தை குறைத்து, மனநிலையை மேம்படுத்த உதவுவதாக ஆய்வுகள் சொல்லுகிறன.

4. மூல நோயை குணமாக்கும்

பொதுவாக மூல நோய் உள்ளவர்களுக்கு மலம் கழிப்பது சிரமமாக இருக்கும். மேலும் மலம் கழிக்கும் போது எரிச்சல், வலியை ஏற்படுத்தும். எனவே மூல நோய் உள்ளவர்கள் சேனைக்கிழங்கை தங்களது உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

5. மூட்டு தேய்மானம்

வயதாகும்போது ஏற்படும் மூட்டு வலி, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகளை குறைத்து எலும்புகளை வலுவாக வைக்க சேனைக்கிழங்கு உதவுகிறது. ஏனெனில் இதில் கால்சியம், மெக்னீசியம் போன்ற எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

6. மாதவிடாய் வலியை போக்கும்

சேனைக்கிழங்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் இடுப்பு வலி, கை கால் வலி போன்றவற்றிற்கு அருமருந்தாகும். அதுபோல மாதவிடாய் சரியாக வர, இனப்பெருக்க ஆரோக்கியமாக இருக்க, ஆகியவற்றிற்கு சேனைக்கிழங்கு நன்மை கிடைக்கும். வெள்ளைப்படுதல் பிரச்சினையை சரிசெய்யும். மேலும் 40 வயதிற்கு பிறகு பெண்கள் சந்திக்கும் அனைத்து உடல் ரீதியான பிரச்சனைக்கும் இந்த கிழங்கு வரப்பிரசாதமாகும்.

பிற நன்மைகள் :

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும், நெஞ்செரிச்சல், அல்சரை குணமாக்கும். குடல் புண், வயிற்றுப் புண்ணை ஆற்றும்.

யாரெல்லாம் சேனைக்கிழங்கு சாப்பிடக்கூடாது?

- கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடக்கூடாது. காரணம் இது தாய் மற்றும் சேய்க்கு சளியை ஏற்படுத்தும்.

- ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் சனிக்கிழமை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது குளிர்ச்சித் தன்மையுடையது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்