
குளிர்காலம் வந்துவிட்டது. இந்த சீசனில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். அப்படி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய இடத்தை பிடித்திருப்பது நெல்லிக்காய் தான். நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளன. இது தவிர இதில் சக்தி வாய்ந்த அலர்ஜி எதிர்ப்பு பண்புகள், ஆக்ஸிஜனேற்றிகள், இரும்புச்சத்து, கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இவை செரிமானத்தை மேம்படுத்தும், வீக்கத்தை குறைக்கும், கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும் மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் என பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகிறது.
இத்தகைய சூழ்நிலையில், குளிர்காலத்தில் தினமும் காலையில் ஒரு ஆம்லா ஷாட் குடித்து வந்தால் ஆரோக்கியத்திற்கு கோடி நன்மைகள் கிடைக்கும். இந்த பதிவில் அதை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நெல்லிக்காய் - 6
இஞ்சி - 1 துண்டு
சீரகம் - 1 ஸ்பூன்
வெல்லம் - 2 ஸ்பூன்
புதினா இலைகள் - 1/2 கப்
தண்ணீர் - தேவையான அளவு
தயாரிக்கும் முறை :
இதற்கு முதலில் நெல்லிக்காயை நன்கு கழுவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி அதை மிக்ஸியில் போட்டு அதனுடன் வெல்லம், சீரகம், புதினா இலைகள், இஞ்சி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு அதை வடிகட்டி குடிக்கவும்.
நன்மைகள் ;
- குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பானம் உதவுகிறது.
- இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால் முடி உதிர்தல் நின்று முடி வேகமாக வளர ஆரம்பிக்கும். குறிப்பாக நரைமுடி கருப்பாக மாறும்.
- இந்த ஜூஸ் உடலில் இன்சுலின் உற்பத்தியை தூண்டி, சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
- மூளையின் செயல்பாட்டை அதிகரித்து, நினைவாற்றலை அதிகரிக்க இந்த பானம் உதவும்.
- இந்த பானம் சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.