Poondu Chutney : வெறும் பூண்டு சட்னினு நினைக்காதீங்க; பிபி முதல் கொழுப்பை கரைப்பது வரை பல நன்மைகள்!!

Published : Jul 24, 2025, 02:50 PM IST
garlic chutney

சுருக்கம்

இந்த பதிவில் பூண்டு சட்னி செய்முறை மற்றும் அதன் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

பூண்டு சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருள். இது சுவையை கொடுப்பது மட்டுமல்லாமல் ஏராளமான மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளன. இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பை குறைக்கவும், வாயு தொல்லை தலைவலி சர்க்கரை நோய் ஆகியவற்றிற்கு சிகிச்சை அளிக்கவும் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. பூண்டை உங்களது உணவில் எந்த வகையில் சேர்த்துக் கொண்டாலும் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும். எனினும் அதை அதிகமாக சாப்பிடக்கூடாது. அழவோடு சாப்பிட்டால் நன்மைகள் கிடைப்பது உறுதி. சரி இப்போது பூண்டு சட்னி செய்வது எப்படி என்றும் அதன் நன்மைகள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

பூண்டு சட்னி செய்ய தேவையான பொருட்கள் :

பூண்டு - 10-12 பல் (பெரிசு) 

சின்ன வெங்காயம் - 5-7 

காய்ந்த மிளகாய் - 3-4 ( காரத்திற்கு ஏற்ப) 

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு 

கடுகு - 1/2 ஸ்பூன் 

உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன் 

கறிவேப்பிலை - சிறிதளவு 

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை;

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அது ஆற வைத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும் அதனுடன் புளி மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிகாகவும். பின் அரைத்த சட்டினியையும் சேர்த்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான பூண்டு சட்னி தயார். இந்த பூண்டு சட்னியை இட்லி மற்றும் தோசையுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

பூண்டு சட்னியின் ஆரோக்கிய நன்மைகள் :

1. உயரத்த அழுத்தத்தை குறைக்கும்

பூண்டு சட்னி உயர்த்த ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் மிகவும் நன்மை பயக்கும. ஏனெனில் பூண்டில் அல்லிசின் என்னும் பண்புகள் உள்ளது . இது ரத்த நாளங்களை இயல்பாக்கும். அதாவது ரத்தம் அதன் இயல்பான வேகத்தில் தொடர்ந்து ஓட உதவும். இதனால் ரத்த அழுத்தம் குறையும்.

2. நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்

பூண்டில் இருக்கும் ஆக்சிஜனேற்றம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி சளி, இருமல், காய்ச்சல் மற்றும் பிற தொற்று நோய்களை எதிர்த்து போராட உதவும்.

3. வயிற்றுக்கு நல்லது

பூண்டு ஒரு நச்சு நீக்கியாக செயல்படுகிறது. எனவே பூண்டு சட்னி சாப்பிடுவதன் மூலம் உடலில் இருந்து அசுத்தங்கள் வெளியேற்றறும். பூண்டு வயிற்றை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல் வயிறு தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கும்.

4. கொழுப்பை கரைக்கும்

பூண்டு சட்னி இதய ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. பூண்டில் இருக்கும் அல்லிசின் என்னும் பண்பு உடலில் இருந்து கெட்ட கொழுப்பை நீக்குகிறது. மேலும் உடலில் ரத்தம் உறைவதை தடுக்கும்.

5. புற்றுநோயை தடுக்கும்

பூண்டில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் டிமென்சியா போன்ற உடல்நிலை பிரச்சினைகளை கட்டுப்படுத்ததும் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடும். அதுமட்டுமல்லாமல் நுரையீரல் புற்று நோயின் அபாயத்தையும் 44% குறைக்க உதவுவதாக ஆய்வுகள் சொல்லுகின்றது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்