
இந்தியாவில் செயல்படும் இ-காமர்ஸ் நிறுவனங்களில் மிந்த்ராவும் ஒன்றாகும். இதன் மீது நேரடி அந்நிய முதலீட்டு (FDI) விதிகளை மீறி ரூ.1,654.35 கோடிக்கு மோசடி செய்ததாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக பெங்களூரு மண்டல அமலாக்கத் துறை அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மிந்த்ராவும் அதன் தொடர்புடைய நிறுவனங்களும் பொருள்களை மொத்தமாக வாங்கி பணம் செலுத்தும் முறையில் வர்த்தகம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் மறைமுகமாக பல்வேறு நிறுவனங்களின் பொருட்களை தனியொரு நிறுவனத்தின் பெயரில் வணிகம் செய்வதாக தகவல் கிடைத்துள்ளன. இது அந்நிய முதலீட்டு (FDI) விதிகளை மீறிய செயல் என்றும் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.
இந்த நிறுவனம் இலாப நோக்கத்திற்காக நேரடி நுகர்வோர் சில்லறை விற்பனையில் விதிக்கப்பட்ட எப்டிஐ விதிகளை தவிர்க்க முற்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. அதாவது அந்நிய முதலீட்டு (FDI) திருத்த விதிகளின்படி, மொத்த விற்பனை முறையில், ஒரு நிறுவனம் 25 சதவீத பொருட்களை மட்டும் தான் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு விற்க முடியும். இந்த அளவை மீறிய மிந்தரா, வெக்டார் இ-காமர்ஸ் பிரைவேட் (vector E-Commerce pvt) என்ற நிறுவனத்துக்கு எல்லை மீறி விற்பனை செய்து லாபம் ஈட்டியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மிந்த்ரா மீது அமலாக்கத் துறை ரூ.1,654 கோடி வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் மிந்த்ரா மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களின் இயக்குநர்கள் மீதும் புகார்கள் எழுந்துள்ளன. இந்த விசாரணையை மேற்கொண்டு தொடர்ந்தால் தனிநபர் அல்லது நிறுவனங்கள் மீது அபராதங்கள் விதிக்கப்படக் கூடும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.